Show all

அந்த 250 எண்ணிக்கை எப்படி கிடைத்தது அமித்சாவிற்கு! தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை: அமித்சாவின் ஆகூழ் எண்ணா

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, பாஜக தேசிய தலைவர் அமித்சா மற்றும், நிர்மலா சீதாராமன் இருவரில் ஒருவருக்கொருவர் தெரிவித்த முரண்பட்ட கருத்தால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் ஏன் என்ற கேள்வியோடு புருவம் உயர்த்துகின்றனர்.

விமானப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. வெளியுறவுச் செயலாளர் விஜய் கோஹ்லே என்ன அறிக்கையை வெளியிட்டாரோ, அதுதான், அரசின் நிலைப்பாடு என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

விஜய் கோஹ்லே, தனது பேட்டியின்போது, இந்தத் தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் அவர் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால், சில நாட்களுக்கு முன்பாக பாஜக தேசியத் தலைவர் அமித்சா, இந்திய விமானப்படைத் தாக்குதலில் 250 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பேசினார். தற்போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இல்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சரான நிர்மலா சீதாராமனே கூறியுள்ளார்.

அமித்சா-நிர்மலா சீதாராமன் ஒருவருக்கொருவர் வேறு வேறான முரண்பட்ட தகவலை வழங்கி இந்திய மக்கள் காதில் வழக்கம் போல பூச்சூட்டுகின்றனர். 

இந்த முரண்பாட்டுக்கு சப்பைகட்டு கட்டுவதற்கு, தமிழிசையும், எச்.ராஜாவும் என்னென்ன செய்யப் போகின்றனரோ என்று தமிழக மக்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,082.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.