Show all

இந்திய வரலாற்றுச் சிறப்பு மிக்கதோர் நிறுவனச் சேவை நிறுத்தம்! ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, தற்காலிகமாக முடிவுக்கு வந்தது

வங்கிகள், அவசர நிதியுதவி வழங்க மறுத்து விட்ட நிலையில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நேற்று புதன் கிழமையுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம், 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனர், நரேஷ் கோயல், தன் பங்கு மூலதனத்தை குறைத்துக் கொள்ள வங்கிகள் கூட்டமைப்பு யோசனை வழங்கியது. இயக்குனர் குழுவில் மாற்றம் செய்து, 75 விழுக்காட்டுப் பங்குகளை விற்க, வங்கிகள் கூட்டமைப்பு முயற்சித்தது. அது பலனளிக்க வில்லை. அதனால், இக்கூட்டமைப்பால் உறுதி அளித்தபடி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடியவில்லை.
இந்நிலையில், குத்தகைக்கு விமானங்களை அளித்த நிறுவனங்கள், பெரும்பாலான விமானங்களை திரும்பப் பெற்றுக் கொண்டன. அதனால், 123 ஆக இருந்த விமானங்களின் எண்ணிக்கை, தற்போது, ஐந்தாக குறைந்து விட்டது. உடனடியாக, 400 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தால், சேவையை தொடரலாம் என, ஜெட் ஏர்வேஸ் தெரிவித்தது. ஆனால், மேற்கொண்டு நிதியுதவி அளிக்க, வங்கிகள் மறுத்து விட்டன. இதனால், ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,126.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.