Show all

காங்கிரசார் ஹிந்தி மொழிக்கு ஆற்றிய அளப்பரிய தொண்டு!

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் கட்சி இந்தியா விடுதலை பெறுவதைவிட, விடுதலை பெற்ற இந்தியாவில் எப்படி ஆளுவது என்பது குறித்து மிகவும் அதிகமாகச் சிந்தித்திருக்கிறது. ஏனென்றால் ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த உலக நாடுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக விடுவிக்கத் தொடங்கி விட்டார்கள். அதுமட்டுமல்ல ஆங்கிலேயர் காலத்திலேயே காங்கிரஸ்காரர்கள் இந்தியாவை ஆளத் தொடங்கி விட்டார்கள். காங்கிரஸ் கட்சியின் முதல் இலட்சியம் 'ஆங்கிலேயர் அதிகார இடத்தில் காங்கிரஸ் ஆங்கிலேயரின் ஆதிக்க மொழியிடத்தில் ஹிந்தி.'

காங்கிரஸ்காரர்களுக்கு எழுந்த தலையாய கேள்வி இந்திய மக்களை ஆளுவதற்கான சட்டத்தை எந்த மொழியில் எழுதுவது? அவர்கள் அனைவரின் மூளையிலும் உதித்த ஒரே பதில் ஹிந்தி மொழியில் தான் சட்டத்தை எழுத வேண்டும் என்பது. 

இந்திய அரசியலமைப்பு என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. 

இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 101 திருத்தங்கள், 465 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. 

காங்கிரஸ் கட்சியினரின் மிகப் பெரிய சாதனை முயற்சியாக,  அரசியலமைப்பின் ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ ஹந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. 

இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. 

முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. 

இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, 

அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப் பட்டிருந்து இந்திய அரசு சட்டம், 1935 என்னும் சட்டத்திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது. இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது.

இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சி, பெடரல் கவர்ன்மெண்ட் என்ற சொல்லிற்குப் பதிலாக ஒன்றியம் யூனியன் என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில், இறையாண்மை உடைய மக்களாட்சி, சமதர்ம, சுதந்திரக் குடியரசு என்றும் இந்திய ஒன்றியம் என்றும் இந்தியாவிற்கு பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் முழுப் புரிதலையும் தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் அடிப்படை உரிமைகளும் அடங்கும்.

இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் இந்திய அரசமைப்பு சட்டத்தை, கடன்களின் பொதி என்பர். கூட்டாட்சி முறையை கனடாவில் இருந்தும், அடிப்படை உரிமைகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத்திருத்த முறையை தென்னாப்பிரிக்காவிடம் இருந்தும், மாநிலங்களவை நியமன பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையை அயர்லாந்திடம் இருந்தும் பெற்றது. 

இந்தியாவின்; அலுவல் பணிகளுக்கு முதன்மையாக ஹிந்தியையும் கூடுதலாக ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகின்றன. 

பிரித்தானிய இந்தியாவில் ஆங்கிலம் நடுவண் மற்றும் மாநில அளவில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1950ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு பதினைந்து ஆண்டுகளில் படிப்படியாக ஹிந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக அமைக்கப் படவேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் காங்கிரசார் எழுதி விட்டனர். இருப்பினும் இந்திய நாடாளுமன்றத்திற்கு இதன் பின்னரும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துமாறு சட்டமியற்ற அதிகாரம் வழங்கியிருந்தது அரசியலமைப்பு. என்கிற ஒரே நிலையில்,  ஹிந்தியை மட்டுமே ஒரே அலுவல் மொழியாக ஆக்குவதற்கு எழுந்த எதிர்ப்பின் விளைவாக ஆங்கிலம் அலுவல்மொழியாகத் தொடர்கிறது. 

ஆனாலும் காங்கிரஸ் நடுவண் அரசின் செலவில் ஹிந்தியை தமிழகம் தவிர்த்த மற்ற இந்;;;;திய மாநிலங்களில், ஆங்கிலத்திற்கு மாற்றாக நிறுத்த முடியாவிட்டாலும் இன்னொரு மொழியாகத் தொடர்ந்து பயன்படுத்தும் வகை செய்து விட்டது. 

ஹிந்தித் திணிப்பிற்கான விதையை காங்கிரசார் 1930களிலேயே தொடங்கி விட்டனர். திராவிட இயக்கங்கள், ஹிந்தி திணிப்பு எதிர்ப்பை வைத்தே தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி, காங்கிரசை நிரந்தரமாக அப்புறப் படுத்தி ஆண்டு கொண்டிருக்கிற நிலையிலும் காங்கிரஸ் ஹிந்தி வளர்ச்சிக்கு ஆற்;;றிய பணியில், இலட்சத்தில் ஒரு பங்கு கூட திராவிடக் கட்சிகள் தமிழுக்கு ஆற்றவில்லை.

காங்கிரசால் பதவி பெற்ற அதிகாரிகளும் ஹிந்தி வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். திமுகவால் பதவி பெற்ற அரசு அதிகாரிகள் ஜாக்டோ ஜியோ அமைப்பு கட்டி சம்பள ஒயர்வுக்கு போராடுவதில் காட்டுகிற ஆர்வத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது அரசு பள்ளிகளில் தமிழ் வளர்ச்சிக்கு காட்டவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,044.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.