Show all

ஆயிரம்கோடி நிதி கோரி மோடிக்கு பஞ்சாப் முதல்வர் கடிதம்! பஞ்சாப்பில் கடும் வெள்ள பாதிப்பு

பஞ்சாப்பில் கடும் வெள்ள பாதிப்பு. வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பீடுகளைச் சரிசெய்ய சிறப்பு தொகுப்பாக ரூ1000 கோடி வழங்க கோரி இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பருவமழை தீவிரமடைந்து, பஞ்சாப் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.  தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஜலந்தர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 

மாநிலம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கவனிக்குமாறு அனைத்து துறைகளுக்கும் முதல்அமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில், வெள்ள நிவாரண நிதி கோரி இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு பஞ்சாப் முதல் அமைச்சர் அமரீந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார். வெள்ளத்தால் ஏற்பபட்ட  இழப்பீடுகளை சரிசெய்ய  சிறப்புத்தொகுப்பாக  ரூ .1000 கோடி  நிதி வழங்க வேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி முதல்வராக அமரீந்தர் சிங் ஆட்சி நடைபெற்று வருகிறது. 
 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,253.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.