Show all

ஜவஹர்லால் நேரு நேதாஜியைக் கைது செய்து பிரிட்டன் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டிய நிர்பந்த

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ரகசிய ஆவணங்களை மேற்கு வங்காள மாநில அரசு வெளியிட்ட பின்னர் அவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன.

அவரது மரணச் செய்தியை அவரே வானொலியில் கேட்டதாக வந்த திடுக்கிடும் தகவலையடுத்து, 1952-ம் ஆண்டு வரை சர்தானந்தா முனிவராக வாரணாசி குகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்ந்ததாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடுவண் அரசின் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற ஷியாமாச்சரண் பாண்டே என்பவர், தனது தந்தையான கிருஷ்ணகாந்த் பாண்டேவின் டைரி குறிப்புகளில் கண்ட சில விபரங்களைப் பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசுக்கு சமீபத்தில் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

அந்தக் குறிப்புகளின் அடிப்படையில் நேதாஜி 1945-ம் ஆண்டு இறந்ததாக கூறப்படும் வரலாறு தவறானது என சுட்டிக் காட்டியிருந்த அவர், 1952-ம் ஆண்டுவரை நேதாஜி வாரணாசியில் உள்ள ஒரு குகையில் சர்தானந்தா முனிவர் என்ற பெயரில் ரகசியமாக வாழ்ந்து வந்ததாகவும் ஷியாமாச்சரண் பாண்டே நடுவண் அரசிடம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதாரமாக நேதாஜிக்கும் தனது தந்தை கிருஷ்ணகாந்த்துக்கும் இடையில் நடைபெற்ற கடித தொடர்புகளையும் அவர் ஆவணப்படுத்தியுள்ளார்.

2-12-1951 அன்று கங்கை ஆற்றங்கரை பகுதியில் நைந்துப்போன உடையில் இருந்த ஒரு முனிவரை எனது தந்தை சந்தித்தார். காசிபூரில் உள்ள பஹுரி பாபா ஆசிரமத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த அந்நபர், எனது தந்தையிடம் இன்றிரவு இந்தப் பகுதியில் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டுள்ளார்.

உடனடியாக அவருக்கு ஒரு கம்பளியைக் கொடுத்த எனது தந்தை கிருஷ்ணகாந்த், நீங்கள் விரும்பும்வரை இங்கே தங்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட அந்த முனிவர், நான் யார் கண்களிலும் படாமல் வசிக்கக்கூடிய ஒரு தனிஇடத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, வாரணாசி-காசிபூர் சாலையில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காத்தி என்ற இடத்தின் அருகே மூங்கில்களினால் உருவாக்கப்பட்ட ஒரு குகைக்குள் 14-1-1952 சங்கராந்தி தினத்தன்று அந்த முனிவர் குடியேறினார். அந்தக் குகையில் அவர் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது, மிக பிரபலமாக விற்பனையாகிவந்த ஒரு ஆங்கில நாளிதழை அவர் அன்றாடம் விரும்பி படித்தார்.

அந்த மூங்கில் குகையில் ஒரு புதிய முனிவர் தங்கியுள்ளதை அறிந்த உள்ளூர் மக்கள் அவரது அருளைப்பெற குகையை நோக்கி வர ஆரம்பித்தனர். ஒரேயொரு நிபந்தனையின் பேரில் அவர்களில் சிலரை நேதாஜி சந்தித்துள்ளார். தேசிய விடுதலைப் படை ராணுவத்தை உருவாக்கிய நேதாஜியின் ஜாடையை ஒத்துள்ள தன்னிடம் நேதாஜி தொடர்பாக யாரும், எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்பதே அந்த நிபந்தனை.

அந்த முனிவரைப் பற்றியச் செய்தியை இரு உள்ளூர் பத்திரிகைகள் அப்போது வெளியிட்டிருந்தன. இதையடுத்து, காத்தி குகையில் இருந்து தனது இருப்பிடத்தைக் காலி செய்த அவர், பிப்ரவரி மாதம் 14-ம் தேதி விந்தியாச்சல மலைப்பகுதியை நோக்கி இடம் பெயர்ந்தார் என கிருஷ்ணகாந்த் பாண்டேவின் டைரி குறிப்புகளில் கண்ட ஆதாரங்களைச் சுட்டிக்காட்டிய ஷியாமாச்சரண் பாண்டே, பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

நேதாஜி சொந்த நாட்டிலேயே தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய முக்கிய காரணமும் இருந்தது. இந்தியாவுக்கு விடுதலை அளித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சர்வதேச போர்க்குற்ற உடன்படிக்கையின்படி, நேதாஜி உயிருடன் கிடைத்தால் அவரை பிரிட்டன் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

அந்த நிலையில், அப்போது யார் கண்களிலாவது பட்டால், மேற்கண்ட நிபந்தனையின்படி, அந்நாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நேதாஜியை கைது செய்து பிரிட்டன் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதை தவிர்க்கவே அவர் முனிவர் வேடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய அவசியம் ஏற்பட்டது, என தெரியவந்துள்ளது


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.