Show all

ஜியோவுக்கு 3.78 லட்சம் வாடிக்கையாளர்கள் வரவு, ஏர்டெல்லுக்கோ 100 கோடி வருமானம் இழப்பு! இடையில் தொடர்வண்டித்துறை

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தொலைத் தொடர்பு சந்தையில் கோலோச்சி வந்த ஏர்டெல், இந்தியத்; தொடர்வண்டித் துறைக்கு தொலைத் தொடர்பு சேவை வழங்கி வந்தது என்பது நம்மில் பலருக்கு தெரியாத செய்தி. 

ஏர்டெல் உடனான ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிகிறது. அடுத்த ஆண்டு முதல் இந்தியத் தொடர்வண்டித் துறை  ஊழியர்களுக்கான 'தனிக்குழு' தொலைத் தொடர்புச் சேவை வழங்குவதற்கான ஒப்;பந்தத்தில் இந்த முறை ஜியோ வென்றிருக்கிறது. 

வழக்கம் போல ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் நிறுவங்களை விட மிகக் குறைந்த விலைக்கு சேவையை வழங்குவதாக குறிப்பிட்டு ஏலத்தை தன்வசம் ஆக்கிவிட்டது. இந்தியத் தொடர்வண்டித் துறையில் சுமார் 1.95 லட்சம் ஊழியர்களுக்கு தொல்லைபேசி சேவை வழங்கிய ஏர்டெல் நிறுவனம், ஆண்டுக்கு சுமார் 100 கோடி வரை வருமானம் கண்டு கொண்டிருந்தது. 

ஏர்டெல் நிறுவனம் சுமார் 1.95 லட்சம் ஊழியர்களுக்கு மட்டுமே சேவை அளித்தது. ஆனால் ஜியோ தற்போது 3.78 லட்சம் ஊழியர்களுக்குச் சேவை அளிக்கவுள்ளது. அதிக வாடிக்கையாளர்கள் கைவசம் இருக்கும் நிலையில் தொடர்வண்டித் துறைக்கு குறைந்த விலையில் சேவை வழங்க ஜியோ முன் வந்திருக்கிறது. 

இதனால் தொடர்வண்டித் துறைக்கு கிட்டத்தட்ட 35விழுக்காடு செலவுகள் குறையுமாம். தொடர்வண்டித்; துறைக்கு 35விழுக்காடு செலவுகள் குறைவு, ஜியோவுக்கு 3.78 லட்சம் வாடிக்கையாளர்கள் வரவு, ஏர்டெல்லுக்கோ 100 கோடி வருமானம் இழப்பு

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,979.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.