Show all

விருதை திருப்பி அளிப்பதை விடவும் தங்கள் கருத்தைக் கட்டுரையாகப் பதிவுசெய்யலாம்

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலைஞர்களும், எழுத்தாளர்களும் விருதுகளைத் திருப்பி அளித்து வரும் நிலையில், தனக்குக் கிடைத்த தேசிய விருதைத் திருப்பித் தரமாட்டேன் என நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

நான் எனக்கு அளித்த தேசிய விருதுகளைத் திருப்பித் தரமாட்டேன். சகிப்புத்தன்மை என்பது கொடுத்து வாங்குவதாகும். சகிப்புத்தன்மையற்ற போக்கினால் தான் 1947-ல் இந்தியாவைப் பிரித்தது. மீண்டும் அது நாட்டைப் பிரிக்கக்கூடாது.

5ஆண்டுகளுக்கு ஒருமுறை சகிப்புத்தன்மையற்ற சூழல் குறித்து நாம் விவாதம் செய்யவேண்டும். சகிப்புத்தன்மையற்ற போக்கு என்னிடம் கிடையாது. கடவுள் பக்தி இல்லாவிட்டாலும் எல்லா மதங்களிடமும் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்வேன்.

விருதுகளைத் திருப்பித் தருவதால் ஒன்றும் நடக்காது. நமக்கு விருதை அன்புடன் அளித்த அரசு அல்லது மக்களை அவமானப்படுத்துவதைத் தவிர.

இதனால் உங்களுக்குக் கவனம் கிடைக்கும். ஆனால், கவனம் ஈர்க்க பல வழிகள் உள்ளன. விருதைத் திருப்பி அளித்தவர்கள் மிகவும் திறமைசாலிகள். விருதைத் திருப்பி அளிப்பதை விடவும் தங்கள் கருத்தைக் கட்டுரையாகப் பதிவு செய்தால் இன்னும் அதிக கவனம் கிடைக்கும். அவர்கள் விருதுகளைத் தங்களிடம் வைத்துக்கொண்டு நம்மைப் பெருமைப்படுத்தவேண்டும். அதேசமயம் தொடர்ந்து போராடவேண்டும் என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.