Show all

வடிவேலு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ம

வடிவேலு நடித்த ‘எலி’ படத்தால் தனக்கு 9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஜி. சதீஷ்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

‘எலி’ படத்தின் தயாரிப்பாளர் ஜி.சதீஷ்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

நான் சிட்டி சினி கிரியேஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். எலி படத்தின் தயாரிப்பாளர் ராம்குமாரால் படத்துக்குச் செலவு செய்யமுடியாததால் உங்கள் நிறுவனம் படத்தைத் தயாரிக்கவேண்டும் என்று வடிவேலு என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் என் நண்பர் என்பதால் இதற்கு ஒப்புக்கொண்டேன். வடிவேலுவின் பேச்சை நம்பி ரூ.17 கோடி செலவழித்தேன். ஆனாலும் படம் சரியாக ஓடவில்லை. இதனால் எனக்கு ரூ.9.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது. படம் சரியாக ஓடாததால் சில தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் பணம் கேட்டு என்னை மிரட்டுகிறார்கள்.

படத்தை முதலில் தயாரித்த ராம்குமாருக்கு நான் ரூ. 90 லட்சம் தரவேண்டும் என்றும் மிரட்டப்படுகிறேன். இதை நான் வடிவேலுவிடம் கூறினேன். அவரும் அவர் நிருவாகியும் கணக்காளரும் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். நஷ்டத்தைத் தரமுடியாது என்றார்கள். பணத்தைக் கொடுக்காமல் என்னை ஏமாற்றி வருகிறார்கள்.

இதனால் வடிவேலுவினால் ஏற்பட்ட நஷ்டத்தை அவரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். என்னை மிரட்டும் வடிவேலு உள்ளிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தன் மனுவில் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.