Show all

மாநிலசுயாட்சி மத்தியில் கூட்டாட்சி ஊத்தி மூடியாச்சு! 44 தொழிலாளர் நலச்சட்டங்களை, நான்காக ஒருங்கிணைத்து புதிய சட்டம்

எதிர்வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் தொழிலாளர் நலன் சார்ந்த 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக ஒருங்கிணைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாராட்டக் கூடிய தொழிலாளர் நலச் சட்டங்களைத் பதிகை செய்யவிருப்பதாகச் தகவல் வெளியாகியுள்ளது.

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் ஆறு விழுக்காட்டு பேர்கள்தாம் வருமான வரி செலுத்துகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்கிற கூலித் தொழிலாளர்கள் தான். இந்த ஆறு பேரைப் பற்றி அதிகம் கவலைப் பட வேண்டாம். ஆனால் அந்த 94 பேருக்கு அரசு வகுக்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள் தேவை. அதற்கு இந்தியாவில் தற்போது 44 சட்டங்கள் இருக்கின்றன. அப்படி சட்டங்கள் இருப்பதைக் கூட அறியாதவர்கள் தாம் அந்த 94 விழுக்காட்டு இந்தியர்கள். மீண்டும் பதவியேற்றுள்ள மோடி அரசு புதிய நான்கு சட்டங்களை கொண்டு வர இருக்கிறதாம், ஆனால் அந்த 44 சட்டங்களை ஒருங்கிணைத்து. 

எதிர்வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் தொழிலாளர் நலன் சார்ந்த 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக ஒருங்கிணைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாராட்டக் கூடிய தொழிலாளர் நலச் சட்டங்களைத் பதிகை செய்யவிருப்பதாகச் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று வரை தங்கள் உரிமைகளைக் கேட்டு அறங்கூற்றுமன்றம் அல்லது அரசாங்கப் படியேறும் 100 தொழிலாளர்களில் இரண்டு பேருக்கு நியாயம் கிடைத்தாலே பெரிய விசயம். இந்தச் சூழலில் தொழிலாளர்களுக்கு சாதகமாக 44 சட்டங்கள் இருக்கின்ற போதே இந்த கொடுமை. இப்போது இந்த 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக, அதுவும் முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக இயற்றும் போது எப்படி தொழிலாளர் பக்கம் நின்று தொழிலாளர் பிரச்னைகளை அரசாங்கம் அணுகும்? மோடிக்கு வாக்களித்த வடஇந்திய மக்களுக்கு அல்லது பலரும் குற்றச்சாட்டு வைப்பது போல வடஇந்திய மக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக காட்டுவது எளிது என்று வாக்களித்த இயந்திரங்களுக்கே வெளிச்சம். 

அமித்சா, நிர்மலா சீதாராமன், சந்தோஷ் கங்வார், பியுஷ் கோயல் ஆகியோர்கள் எல்லாம் ஒன்று கூடி, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக தொழிலாளர் நலச் சட்டங்களைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்களாம். அதோடு வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே சட்ட வரைவை பதிகை செய்யவும் முடிவு செய்திருக்கிறார்களாம்.

ஓய்வூதியச் சட்டம், தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகச் சட்டம், பிள்ளை பேறு கால சலுகைகள் சட்டம், கட்டட மற்றும் கட்டுமானப் பணியாளர்கள் சட்டம், தொழிலாளர் இழப்பீடு சட்டம் போன்றவைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தொழிலாளர் சமூக பாதுகாப்புச் சட்டம் என் ஒன்றைக் கொண்டு வரப் போகிறார்களாம்.

சுரங்கச் சட்டம், ஆலைப் பணியாளர்கள் சட்டம், துறைமுகப் பணியாளர்கள் பாதுகாப்பு நலம் மற்றும் சுகாதாரச் சட்டங்களை எல்லாம் ஒன்று சேர்த்து தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலச் சட்டங்கள் என்கிற பெயரில் இயற்றப் போகிறார்களாம்.

குறைந்த பட்ச கூலிச் சட்டம், கூலி கொடுக்கும் சட்டம், சிறப்பூதியம் கொடுக்கும் சட்டம், சம ஊதியச் சட்டம் போன்றவைகள் எல்லாம் ஒன்று சேர்த்து ஊதியம் மற்றும் கூலிச் சட்டங்கள் என ஒன்றைக் கொண்டு வரப் போகிறார்களாம்.

தொழிற்துறை உறவில் தொழிலாளர் வரையறைச் சட்டங்கள், தொழிற்சாலை பிரச்சனைச் சட்டங்கள், தொழிற் சங்கச் சட்டங்கள், தொழிற்துறை வேலைவாய்ப்புச் சட்டங்கள் எல்லாம் ஒன்றிணைத்து தொழிற்துறை உறவுச் சட்டம் என்கிற பெயரில் கொண்டு வருகிறார்களாம். இதனால் இந்தியப் பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் பறக்கும் என நம்புகிறார்கள் பாஜக அமைச்சர்கள் மற்றும் நிதிஅயோக்கின் துணைத்தலைவர் ராஜிவ் குமாரும்.

மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்கிற தத்துவத்தை சுக்கு நூறாக தகர்க்க விரும்புகிறது பாஜக நடுவண்அரசு மாநில அரசுகளின் வருவாயில், சரக்கு-சேவை வரியாகச் சுருட்டி விட்டார்கள். தற்போது தொழிலாளர் சட்டங்களில் குறுக்கம் அடுத்து மிக விரைவில் வர இருப்பது நில சீர் திருத்தச் சட்டங்கள். இந்தச் சட்டங்கள் மூலம் மாநில அரசின் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் பறிக்கப் போகிறது நடுவண் பாஜக அரசு. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,181.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.