Show all

ஊழல் ஒழிப்புக் கட்சியின் தேநீர், சமோசா செலவுகள் ரூ.1 கோடியாம்

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சர்கள் தேநீர், சமோசாவுக்காக மட்டும் ரூ.1 கோடி செலவழித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது அடுக்கடுக்காக புகார்கள், குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆம் ஆத்மி அமைச்சர் படம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் ஆம் ஆத்மி அரசில் இடம் பெற்றுள்ள கேபினட் அமைச்சர்களில் 6 பேர் தேநீர் மற்றும் சமோசாவுக்காக ரூ.1 கோடி செலவழித்துள்ளது தெரியவந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த விவேக் கர்க் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி அரசின் அமைச்சர்கள் செலவுகள் குறித்த விவரங்களை கேட்டு மனு செய்தார். இதுகுறித்து டெல்லி அரசின் நிர்வாக துணை செயலாளர் கிருஷ்ணலால் அளித்த பதிலில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தன்னை காண வரும் விருந்தினர்களுக்கு தேநீர், சமோசா, பிஸ்கட் போன்றவற்றை அளிப்பதற்காக மொத்தம் ரூ.47.29 லட்சம் செலவு செய்துள்ளார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ரூ.11.28 லட்சம், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கோபால் ராய் ரூ.11.06 லட்சம் செலவழித்துள்ளார். கோபால் ராய் மீது ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது. சமூக நலத்துறை அமைச்சராக இருந்த சந்தீப் குமார் ரூ.9.11 லட்சமும், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ரூ.9.10 லட்சமும், சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா ரூ.6.30 லட்சமும் தேநீர், சமோசா போன்றவற்றிற்காக செலவிட்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த அளவில் உணவுத்துறை அமைச்சர் இம்ரான் ஹூசைன் மட்டும் ரூ.5.89 லட்சம் செலவிட்டுள்ளார் என்றும் அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.