Show all

அமராவதியில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில்

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திர தலைநகர் அமராவதியில், 150 கோடி ரூபாயில், ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான பாலைக்கால் பூசை நேற்று நடந்தது.

திருமலை திருப்பதி அறத்;துறை, நாடு முழுவதும் பல இடங்களில் ஏழுமலையான் கோவில்களை அமைத்து வருகிறது. அண்மையில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோவில், பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம், ஐதராபாதிலும், ஏழுமலையான் கோவில் திறக்கப்பட உள்ளது.

அதேபோல், ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியில் உள்ள வெங்கடபாளையம் அருகில், ஏழுமலையான் கோவில் கட்ட, மாநில அரசு, அறத்துறைக்கு 25 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கீடு செய்தது. அதில், 150 கோடி ரூபாய் செலவில், ஏழுமலையான் கோவில் கட்ட, அறத்துறை முடிவு செய்தது.

அதற்கான பாலைக்கால் பூசை நேற்று காலை நடந்தது. ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு, ஏழுமலையான் கோவில் கருவறை அமைய உள்ள நிலத்தை, ஏர் கலப்பையால் உழுது, நவதானியம் விதைத்து, பூசை நடத்தினார். அமராவதியில் கோவில் கட்டும் பணி, இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என்று தெரிவிக்கப் படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,050.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.