Show all

ஓணம் திருவிழாவின் போது கேரளாவில் ஆன்-லைன் மூலம் மது விற்பனையா

ஓணம் திருவிழாவின் போது கேரளாவில் ஆன்-லைன் மூலம் மது விற்பனை செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்தத் திட்டத்தை முன்வைத்த மாநில கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, இது குறித்து மாநில அரசுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவித்து இருந்தது. இந்தத் திட்டத்துக்கு மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, மாநில அரசின் இந்த நடவடிக்கை மது குடிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் செயல் என தெரிவித்தார். புகழ்பெற்ற ஓணம் பண்டிகையின் போது மாநிலத்தின் பெருமையையும், சிறப்பையும் அவமதிக்கும் செயல் இது என பா.ஜனதாவும் குற்றம் சாட்டியது. இதை தொடர்ந்து இந்தத் திட்டத்தை கேரள அரசு கைவிட்டு உள்ளது. இது குறித்து மாநில சுற்றுலா மற்றும் கூட்டுறவு அமைச்சர் ஏ.சி.மொய்தீன் கூறுகையில், ஆன்-லைன் மது விற்பனை திட்டம் தொடர்பாக மாநில அரசோ, அரசுக்கு சொந்தமான கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்போ எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.