Show all

திசை மாறுகின்றன! சபரிமலையில் அனைத்து அகவை பெண்களும் ஐயப்பனை வணங்கலாம் எனும் தீர்ப்புக்கெதிரான முழக்கங்கள்

05,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு பெண்கள் போகலாமா? பாரம்பரியம் கெட்டுப் போகுமே என்ற பாலினச் சமத்துவத்திற்கு எதிரான ஒப்பாரிகள் ஓய்ந்தன. 

தற்போது புதிய பல்லவி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. 51 பெண்கள் ஐய்யப்பனை வணங்கினார்கள் என கேரள அரசு அளித்த பட்டியலில் குளறுபடி என்ற பல்லவியை மீட்டத் தொடங்கியிருக்கிறார்கள் பாலினச் சமத்துவத்திற்கு எதிரான ஆணாதிக்கவாதிகள். 

கேரள அரசு இப்போதுதான் முதல் முறையாக 10 முதல் 50 அகவை உடைய 51 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு சென்றதாக தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது அதில் ஏதாவது ஓட்டை கண்டு பிடிக்க முடியுமா என்கிற ஆய்வு தொடங்கியிருக்கிறது.

51பேர்கள் போயிருக்க வேண்டாம் ஐந்து பேர்கள் போயிருக்கட்டுமே. பாலினச் சமத்துவத்துக்கு ஆதரவாக துணிந்து குரல் கொடுக்கிறவர்கள் ஐந்து பேர்களாவது இருக்கத்தானே செய்கிறார்கள். 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் கூட வெறுமனே ஐந்து விழுக்காட்டினர்தான் கலந்து கொண்டார்கள் என்று தானே வரலாறு சொல்கிறது. 

மொத்தத்தில் பாலினச்சமத்துவத்திற்கு எதிரானவர்களின் குரல் கத்தி கத்தி கம்மத் தொடங்கி விட்டது என்பது மட்டும் உண்மை. எதிர்காலத்தில் திருப்பதியைப் போல அனைத்து மக்களையும் வரவேற்கும் கோயிலாக சபரிமலை அமையப் போகிறது என்பது மட்டும் உண்மை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,037.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.