Show all

வீரபத்ரசிங்கை கைது செய்ய சி.பி.ஐ.யின் முயற்சியை தசாரா விடுமுறைக்கு பிறகே தொடரமுடியும்.

இமாச்சலபிரதேச முதல்-மந்திரியான வீரபத்ரசிங்,

முன்பு நடுவண் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்துள்ளன. மேலும் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அண்மையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இது தொடர்பான வழக்கு டெல்லி உயா;நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தனது வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், இமாச்சலபிரதேச  உயர்நீதிமன்றத்தில்  வீரபத்ரசிங் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் ராஜீவ் சர்மா மற்றும் சுரேஷ்வர் தாகூர், முதல்மந்திரி வீரபத்ரசிங் மற்றும் அவரது மனைவி பிரதீபாசிங் ஆகியோரை கைது செய்ய தடை விதித்தனர்.

இந்த நிலையில்,

இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ  மேல்முறையீடு செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் ஆஜரான  கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ் பாட்வாலியா,

வீரபத்ரசிங்கை கைது செய்ய மட்டும் தடை விதிக்காமல்  அனுமதியின்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவே இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு மனுவை நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்துவிட்டது. இது மிகவும் அவசரமான ஒன்று அல்ல என்று கூறிய நீதிபதிகள் தசாரா விடுமுறைக்கு பிறகு சிபிஐயின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.