Show all

செவ்வாய்க்கிழமை, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! நடுவண் பாஜகஅரசின் ஹைட்ரோ கார்பன் முன்னெடுப்பு அடாவடி அறிவிக்கைக்கு எதிராக

மத்திய பாஜக அரசின் உழவர்கள், வெகுமக்கள் விரோத செயல்களைக் கண்டித்தும்- ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி, மக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தியும்- வேளாண் நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் திரும்பப் பெற்று, காவிரி கழிமுகத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கும் முகமாக வருகிற செவ்வாய்க் கிழமையன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டத்தலைநகரங்களில், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியா முழுக்க- எங்கேயும்- யாருடைய நிலத்திலும்- எந்தவகைப் பயன்பாட்டில் இருந்தாலும்- பயன்பாட்டில் உள்ளவர்கள் அனுமதியில்லாமல்- நடுவண் பாஜக அரசிடம் ஒப்பந்தம் பெற்ற கார்ப்பரேட்டுகள் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஆய்வுக் கிணறுகள் தோண்ட முடியும்! சுற்றுச்சூழல் அனுமதி, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஆகிய எதுவும் தேவையில்லை. இந்த ஆதிக்க அறிவிக்கையை நாளது 02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (16.1.2020) அன்று அறிவித்துள்ளது நடுவண் பாஜக அரசு.

இந்த அறிவிக்கை- காவிரி கழிமுகப் பகுதிகளை பாலைவனமாக்கி வேளாண்பெருமக்களின் வயிற்றில் அடிப்பதோடு, இந்தயாவில்- தமிழக பொருளாதார முன்னிலையைத் தகர்க்கும் நோக்கம் குறித்ததாகும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 

எவ்வித அனுமதியும் பெறாமல், சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு உட்படாமல் இதற்கு முன் இருந்த எந்த நடுவண் அரசும், இப்படி ஆதிக்க ஆளுமையாக எந்தத் திட்டங்களையும் முன்னெடுத்ததில்லை. ஆனால் தமிழக உரிமைகளுக்கும் வேளாண்பெருமக்களின் நலன்களுக்கும் முற்றிலும் விரோதமாக நடுவண் பாஜக அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டு, தமிழகத்தில் உள்ள வேளாண் பகுதிகளை பாலைவனமாக திட்டமிட்டு மாற்றிடத் துணிந்துள்ளது. 

மத்திய பாஜக அரசின் உழவர்கள், வெகுமக்கள் விரோத செயல்களை கண்டித்தும்- ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி, மக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தியும்- வேளாண் நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் திரும்பப் பெற்று, காவிரி கழிமுகத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கும் முகமாக வருகிற செவ்வாய்க் கிiமையன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டத்தலைநகரங்களில், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.