Show all

காஷ்மீரில் மீண்டும் மக்களாட்சி! காஷ்மீர் முதல்வராகிறார் அல்தாப் புகாரி. புகையும்'பாகிஸ்தான் சதி' என்ற, பாஜக மசாலா நெடி

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளன. மக்கள் ஜனநாயக கட்சியின் அல்தாப் புகாரிமுதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார். 

காஷ்மீரில் பாஜக ஆதரவுடன், மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி முதல்வராக பதவி வகித்து வந்தார். அரசுக்கு அளித்த வந்த ஆதரவை பாஜக திரும்ப பெற்று கொண்டது. இதனையடுத்து, அங்கு குடிஅரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்பட்டது. 

87 உறுப்பினர்களைக் கொண்ட காஷ்மீர் சட்டசபையில், மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28, தேசிய மாநாட்டு கட்சிக்கு 15, காங்கிரசுக்கு 12, பாஜகவுக்கு 25 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். குடிஅரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட போதிலும் சட்டமன்றம் இதுவரை கலைக்கப்படவில்லை

இந்நிலையில், காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. இதில் தேசிய மாநாட்டு கட்சி வெளியில் இருந்து ஆதரவளிக்க முடிவு செய்தது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. மக்கள் ஜனநாயக கட்சியின் அல்தாப் புகாரியை முதல்வர் பதவிக்கு 3 கட்சிகளும் முன்மொழிந்துள்ளன. இதில் இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட உள்ளது. கூட்டணி அமைப்பதை அல்தாப் புகாரியும் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் கவிந்தர் குப்தா, இந்த கூட்டணி பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்ற, பாஜக மசாலாவைத் தூவி, தனது கடுப்பை வெளிப்படுத்தினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,978.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.