Show all

நலிகிறது நாடு! நிறைகிறது அரசு கருவூலம். பயன்என்கொல்

02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசு கடந்த ஆண்டு அமல்படுத்திய காகித பணமதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு,சேவை வரி போன்ற திட்டங்கள் இந்திய பொருளாதார வளர்ச்சியில் சிக்கலை ஏற்படுத்தின. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சரிந்தது. இதனால் எதிர்க்கட்சிகளும், பல்வேறு பொருளாதார அறிஞர்களும் நடுவண் அரசையும், தலைமை அமைச்சர் மோடியையும் குறைகூறி வருகின்றனர்.

ஆனால் இந்திய அரசு கருவூலம் வரலாறு காணாத வகையில் நிறைகிறது என்பது உண்மை. அலிபாபா குகை போல நிறையும் அரசு கருவூலத்திலிருந்து-

அண்டாக்கா கசம்!

அபுக்கா குகும்!

திறந்திடு சீசே!

என்று களவாடுவதற்கு சிலருக்கு மட்டுமே மந்திரம் தெரிந்திருக்கிறது.

அரசு வரி மூலம் பெறுகிற வருமானம் மறு உற்பத்தி சாராதது. அரசிடம் குவிகிற பணம் ஆட்சியாளர்களுக்கு அந்தப்புரம் அமைக்கவும், உல்லாசமாக சுற்றுலா போகவும் மட்டுமே பயன் பட்டு வருகிறது.

ஆட்சியாளர்கள், சரச சல்லாப உல்லாச சுகங்களில் ஆகா! எவ்வளவு வருமானம் வந்து விட்டது நாட்டிற்கு என்று பெருமை பட்டுக் கொள்கிறார்கள்.

ஊடகங்கள் தமக்கு கிடைக்கிற விளம்பர உற்சாகத்தில் அம்மணஅரசை, ஆடம்பர உடைகள் அணிந்து அழகாக காட்சி தருவதாக அறிவுப் பிழைப்பு நடத்துகின்றன.

ஒரு சிறுவன் ஐயகோ! அம்மணமாக உலா வருகிறார் அரசர் என்று கண்டு சொன்னதைப் போல உண்மையை வெளிப்படுத்த தகுதியானவர்கள் ஒருவரும் இல்லை.

கண்டு சொன்ன சிறுவனையும் பப்பு என்று நையாண்டி செய்யும் நாடாக இருக்கிறது இந்தியா!

மக்கள் குஜராத் தேர்தலை ஆடம்பர அரசை அகற்றும் முயற்சிக்கு பப்புதான் முயல வேண்டும். என்று நல்லாட்சி விரும்பிகள் பேசிக் கொள்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,610

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.