Show all

குழந்தை அழுகைக்கான காரணத்தைக் கண்டறியும் புதிய செல்பேசிபயன்பாடு

குழந்தை எதற்காக அழுகிறது என்ற காரணத்தைக் கண்டறியும் புதிய செல்பேசிபயன்பாடு ஒன்றை தைவான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பயன்;பாட்டில், நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளின் அழுகை பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அக்குழந்தைகள் அழும் சத்தத்தை பதிவு செய்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான விதவிதமான அழுகைகளைச் சேகரித்து இருக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில், இந்தப்  பயன்பாடு குழந்தை ஏன் அழுகிறது? என்பதை தீர்மானிக்கிறது.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அழுகைக்கான காரணத்தை சரியாக சொல்லிவிடும் இந்தப் பயன்பாடு 92 விழுக்காடு வரை துல்லியமாக உள்ளது.

The Infant Cries Translator  என்ற இந்தப் பயன்பாடு ஆப்பிள், ஆன்ட்ராய்டு கருவிகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் ரூ.200-க்கு கிடைக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.