Show all

சகிப்புத்தன்மை குறித்துபேச, காங்கிரசுக்கு எந்த உரிமையும் கிடையாது: மோடி.

1984-சீக்கிய கலவரத்தை அடுத்து சகிப்புத்தன்மை குறித்துபேச, காங்கிரசுக்கு எந்தஒரு உரிமையும் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிஉள்ளார்.

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்று குற்றம் சாட்டி எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளைத் திருப்பி வருகின்றனர்.

அவர்களுடன் காங்கிரஸ் கட்சியும் இவ்விவகாரத்தில் நடுவண் அரசை குறைகூறி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்து உள்ள பிரதமர் நரேந்திர மோடி, சகிப்புத்தன்மை குறித்து பாடம் நடத்த காங்கிரசுக்கு எந்தஒரு வேலையும் கிடையாது என்று கூறிவிட்டார்.

பீகார் மாநிலத்தில் பிரசாரம் செய்துவரும் பிரதமர் மோடி, 1984- சீக்கிய கலவரத்தை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எழுப்பினார்.

இந்திரா காந்தி இறந்த மூன்று நாட்கள் கழித்து, டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்படவில்லை, என்று கூறினார். சகிப்புத்தன்மை குறித்துபேச, காங்கிரசுக்கு உரிமை கிடையாது, அவர்கள் நாடகம் ஆடுகின்றனர் என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்து உள்ளார்.

இப்பிரச்சனையை பிரதமர் மோடி எழுப்புவது இதுமுதல் முறை கிடையாது. சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இறந்த நாளும் அனுசரிக்கப்படுகிறது. கடந்தவருடம் வல்லபாய் படேல் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட போது பிரதமர் மோடி பேசுகையில், நமது மக்கள் கொலை செய்யப்பட்டனர், குறிப்பிட்ட பிரிவினர் மீது மட்டும் தாக்குதலானது நடத்தப்படவில்லை, ஒட்டுமொத்த தேசத்தின் மீது நடத்தப்பட்டது. அது இந்தியாவின் நெஞ்சை துளையிட்ட கத்திக்கூம்பு போல் இருந்தது. என்று கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.