Show all

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு குளச்சல் துறைமுகம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரூ.25 ஆயிரம் கோடி செலவில் மிகப்பெரிய சர்வதேச துறைமுகம் அமைக்க நடுவண் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குளச்சலில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலம் விழிஞத்தில் புதிய துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. எனவே குளச்சலில் துறைமுகம் அமைவதை கேரளா விரும்பவில்லை. எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஒரு குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தினார்கள். ஆனால் கேரளாவின் கோரிக்கையை மோடி நிராகரித்தார். குளச்சலில் துறைமுகம் அமைப்பது உறுதி என்று திட்டவட்டமாக கூறினார். இதனால் துறைமுக பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரள முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றியை கூறி கொள்கிறோம். இரு துறைமுகங்கள் அருகருகே அமைவதால் எந்த பிரச்சனையும் இல்லை. குளச்சலில் துறைமுகம் அமைவதால் விழிஞத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. அடுத்த கட்டமாக நிலங்கள் அளப்பது, சாலை, ரெயில் பாதை அமைத்தல் போன்ற பணிகள் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்படும். அடிக்கல் நாட்டு விழா ஓரிரு மாதங்களில் நடக்கும். மிகப்பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் சில அரசியல் சூழ்நிலை காரணமாக அரசியல் கட்சிகளும், கேரள அரசும் குளச்சல் துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. பிரதமர் மோடி திட்டமிட்டப்படி குளச்சல் துறைமுகம் தேவை என்று தெரிவித்துள்ளார். இது ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் மகிழ்ச்சியான நாள். இதேபோல் மீனவர் பிரச்சனை தொடர்பாக நடுவண் அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ராதாமோகன் ஆகியோருடன் தமிழகம், புதுவை மீனவர்கள் சந்தித்து பேசினார்கள். தென்மாநில மீன்வளத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் சுஷ்மா சுவராஜ் ஏற்கனவே தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.