Show all

பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு: அமித்ஷா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு.

பீகாரில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்க தயாராகி வருகின்றனர் என்ற பாஜக, தலைவர் அமித்ஷா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது போன்ற நிலைமை உள்ளதா என்றும் லாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

பீகாரில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது, இங்கு எந்த தலமையிலான அணி வெற்றி பெறும் என அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையே நிலவுகிறது. பிரதமர் மோடி பல இடங்களில் பல கட்ட பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார் இவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது, இது மாற்றத்திற்கான தேர்தல் என்றும், வளர்சிக்கான தேர்தல் என்றும் மோடி பிரசாரத்தில் பேசி வருகிறார்.

இந்நிலையில் அங்கு 4வது கட்ட தேர்தல் பிரசாரத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பேசுகையில், இந்தத் தேர்தல் முக்கியமான தேர்தல். இங்கு பா.ஜ.க, தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்கப்படும், இதனால் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

இந்தப் பேச்சு குறித்து காங். மற்றும் லாலு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தள்ளனர் . இது குறித்து லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், அமித்ஷா பேசுவது சரியல்ல, அவர் யோசிக்காமல் பேசுகிறார். மாநிலத்தில் சாதி, மத ரீதியில் பிளவு ஏற்படுத்தும் செயல். இது கண்டிக்கத்தக்கது பீகார் மக்களை இழிப்படுத்தும் செயல் என்றார்  

இது குறித்து காங். மூத்த நிர்வாகி திக்விஜயசிங் கூறுகையில், இவரது பேச்சு பிளவு ஏற்படுத்தும் செயல். இவரை பீகாருக்குள் நுழைய விடக் கூடாது என தேர்தல் கமிஷனிடம் புகார் அளிப்போம் என்றார் .

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.