Show all

திமுக காங்கிரஸ் கூட்டணியை உத்தரவாதப் படுத்தியுள்ளார் சந்திரபாபு நாயுடு! வரும் நாடளுமன்றத் தேர்தலுக்கு

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு, பாஜக கனவில் கூட நினைத்து பார்க்காத மிகப்பெரிய கூட்டணியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவாக்கி வருகிறார். தொட்டதெல்லாம் வெற்றி என்ற பாதையில் செல்லும் சந்திரபாபு நாயுடு தற்போது களமிறங்கி இருப்பது நாடாளுமன்ற தேர்தலுக்காக. இந்தியா அரசியல் வரலாறு இதுவரை நினைத்து பார்க்காத பெரிய கூட்டணி 

இந்தக் கூட்டணி குறித்து மாநில கட்சிகள் பல மாதம் முன்பே யோசித்து இருந்தாலும், சென்ற கிழமைதான் இந்த கூட்டணிக்கான மிகப்பெரிய அடித்தளம் போடப்பட்டது. பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டும் வகையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் என்று பல கட்சி தலைவர்களை சென்று சந்திரபாபு நாயுடு பார்த்தார். 

இன்று தமிழகம் வருகிறார் சந்திரபாபு நாயுடு. தமிழகத்தில் திமுக தலைவர்களை சென்று சந்திக்க இருக்கிறார். இதில் கூட்டணி குறித்து பேச முடிவெடுத்துள்ளார். சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து இருப்பதாக நேற்றே ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார். இதனால் திமுக இந்த கூட்டணியில் சேர்வது உறுதியாகி உள்ளது. 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கிட்டத்தட்ட 95 விழுக்காடு எதிர்கட்சிகளை பாஜகவிற்கு எதிராக ஒன்றுதிரட்டிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, இரண்டு இடதுசாரி கட்சிகள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, முஸ்லீம் லீக், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என்று மாநிலங்களின் முக்கிய கட்சிகளை எல்லாம் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். 

இதுவரை எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு எதிராக பாஜக எந்த தேர்தலிலும் வென்றதே கிடையாது. அது தற்போது நாடாளுமன்ற தேர்தலிலும் நடந்து விடுமோ என்று பாஜக பயப்படுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,966. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.