Show all

தவறு செய்தால் மகனாக இருந்தாலும் பதவி நீக்கம் செய்வேன். கேஜ்ரிவால்:

ஊழல் புகாரில் தில்லி உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆசிம் அகமதுகானை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்,

அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளார். மேலும், ஊழல் செய்தால் மகனாக இருந்தாலும் சிறைக்கு அனுப்புவேன.; என்று உறுதிபட தெரிவித்தார் கேஜ்ரிவால்.

தில்லி மாநில உணவு வழங்கல் மற்றும் சுற்று சூழல் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆசிம் அகமதுகான். அவர் மீது முதல்வர் கெஜ்ரிவாலிடம் ஒருவர் புகார் மனு மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருடன் லஞ்சபேரம் பேசும் ஆடியோ ஆதாரத்தையும் இணைத்திருந்தார்.

இந்நிலையில், தில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால்,

இந்தத் தகவலைத் தெரிவித்து அகமதுகானை பதவி நீக்கம் செய்யும் அறிவிப்பை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

மேலும்,

இந்த ஊழல் புகார் குறித்து விசாரிக்க சிபிஐயிடம் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறிய கேஜரிவால்,

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவையும்,

மகாராஷ்டிர முதல்வரையும் பதவி நீக்கம் செய்ய பாஜக தயாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

தவறு செய்தால் மகனாக இருந்தாலும் பதவி நீக்கம் செய்வேன் என்றும் கேஜரிவால் தெரிவித்தார்.

ஆசிம் அகமது கான் வகித்து வந்த உணவுத்துறை அமைச்சர் பதவிக்கு பல்லிமாறன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.