Show all

ரொம்ப தேவைதான்! ஆடல் கலைஞர்களோடான குடிப்பகங்களுக்கு சட்டத்தின் சில பிரிவுகள் தளர்த்தல்; உச்சஅறங்கூற்றுமன்றம் அனுமதி

03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மகாராஷ்டிராவில் ஆடல் கலைஞர்களோடான, குடிப்பகங்களுக்கு சட்டத்தின் சில பிரிவுகள் பற்றி அறங்கூற்றுவர் ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது.  

இதில், உணவகங்கள், விடுதிகள் மற்றும் குடிப்பக  அறைகளில் நடனமகளிர் மற்றும் மகளிர் கண்ணியம் பாதுகாப்பு சட்டம், 2016-ன் சில பிரிவுகள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், கண்காணிப்பு படக்கருவிகள் கட்டாயம் நிறுவும் சட்ட பிரிவு, குடிப்பக அறைகள் மற்றும் நடன தளங்களுக்கு இடையே தடுப்பு இருப்பது கட்டாயம் என்ற சட்ட பிரிவு ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.

இதேபோன்று நடனம் ஆடும் பெண்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  ஆனால் நடன குடிப்பகங்களில் பெண்கள் மீது பணத்தாள்களை மழை போல் பொழிவதற்கு உச்சஅறங்கூற்றுமன்றம் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனுடன் மத வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவை கடந்து நடன குடிப்பகங்கள் அமைய வேண்டும் என்ற கட்டாயப் பிரிவு தள்ளுபடி செய்யப்பட்டது.

நடன குடிப்பகங்கள் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரையே செயல்படலாம் என்று வழங்கப்பட்டு இருந்த அனுமதியை உச்சஅறங்கூற்றுமன்றம் உறுதி செய்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,035.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.