Show all

சீன பால் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நடுவண் அரசு தடை

சீனாவில் இருந்து பால் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நடுவண் அரசு தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் குறைவாக இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பேசிய நடுவண் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

ஐ.எம்.இ.ஐ எனப்படும் சர்வதேச செல்போன்களுக்கான குறியீட்டு எண்கள் இல்லாத சீன செல்பேசிகள் மற்றும் இதர பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இல்லாத சிலரக சீன செல்பேசிகளுக்கும் இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

மேலும் பேசிய அவர் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு பொருட்கள், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத செல்பேசிகள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதே போன்ற குறைபாடுகளை உடைய மற்ற நாடுகளின் பொருட்களின் இறக்குமதிக்கு தற்போது தடை விதிக்க இயலாது என்றார்.

ஏனெனில் உலக வர்த்தக மைய விதிமுறைகள் அமலில் இருப்பதாக குறிப்பிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.