Show all

சாதியக் கொடூரம்! இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன்; ஊர்மக்கள் உதவிக்கு வராத சோகம்

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒடிசாவில் சாதியை காரணம் காட்டி உதவிக்கு யாரும் முன்வராததால் இறந்த தாயின் உடலை மதிவண்டியில் வைத்து இடுகாட்டுக்கு மகன் எடுத்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவின் கர்ப்பாபஹல் கிராமத்தில் தன் தாயுடன் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தன் தாய் இறந்ததை அடுத்து, அவரை நல்லடக்கம் செய்ய அக்கம்பக்கத்தினரை அணுகி உள்ளார். ஆனால்,  சாதியை காரணம் காட்டி உதவிக்கு அவர்கள் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி, தனது மிதிவண்டியின் பின்புறத்தில் தாயின் உடலை வைத்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு எடுத்து சென்ற மகன், அருகிலிருந்த வனப்பகுதியில் அவரை நல்லடக்கம் செய்தது தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி காண்பவர் ஒவ்வொருவர் கண்ணிலும் நீர்சுரக்கச் செய்கிறது. ஈவு இரக்கமற்ற சாதிய வெறித்தனத்தின் மீது கோபம் கொப்பளிக்கிறது.

கலிங்க நாடு என்ற பெயரில் இந்தியாவில் பல்வேறு படையெடுப்புகளுக்கு உள்ளான பகுதி இந்த ஒடிசா. புரட்சிகரமான சிந்தனைகளுக்கு இட்டுச்;;;; செல்கிற எந்த அறிஞரும் தோன்றாத பழமையான, புராண இதிகாச மதவாதிக்கம் நிறைந்த மண்ணாக தொடர்ந்து இருந்து வருகிறது. நீண்ட காலம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மண் இது கடந்த பதினெட்டு ஆண்டுகளாக பிஜி ஜனதா தள கட்சியின் நவீன் பட்நாயக் ஆட்சி புரிந்து வருகிறார். 

தங்க முக்கோணம் என்ற பெயரில் அழைக்கப்படும் புபனேஷ்வர், பூரி மற்றும் கொனார்க் ஆகிய மூன்று முதன்மையான கோயில் நகரங்கள் ஒடிசாவின் உன்னத அடையாளங்களாக வீற்றிருக்கின்றன. இந்த மூன்று தலங்களிலும் முறையே லிங்கராஜ் கோயில், ஜகந்நாதர் கோயில் மற்றும் சூரியக்கோயில் ஆகியவை அமைந்திருக்கின்றன. 

குறிப்பாக புபனேஷ்வர் நகரில் மட்டுமே பார்த்து பார்த்து ரசிப்பதற்கு 100க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.  இவை யாவுமே ஆன்மீகத்திற்கு அப்பாற்பட்ட வரலாற்றுப்பின்னணி மற்றும் கட்டிடக்கலை சான்றுகளாக காட்சியளிக்கின்றன. 

கொனார்க் நகரத்தின் சூரியக்கோயில் இந்தியக்கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாகவும் அற்புத படைப்பாகவும் காலத்தில் நீடித்து வீற்றிருக்கிறது. இக்கோயிலின் பல பகுதிகள் சிதிலமடைந்து காணப்பட்டாலும் இங்கு காணப்படும் பல அபூர்வ கலையம்சங்களுக்காக இது உலக பாரம்பரிய தலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. 

ஒடிசா மாநிலத்தின் இதர சுற்றுலா அம்சங்கள் கட்டிடக்கலை மற்றும் கோயிற்கலை அம்சங்களுக்காக மட்டுமன்றி இதர சிறப்பம்சங்களுக்கும் இந்த ஒடிசா மாநிலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமன நினைவுச்சின்னங்கள், புத்த மடாலயங்கள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்கள் போன்ற சுற்றுலா அம்சங்களும் இந்த கிழக்கிந்திய மாநிலத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒடிசா மக்கள் நகர மற்றும் நாட்டுப்புற கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஒரு சமூகத்தை ஒடிசா மாநிலம் கொண்டிருக்கிறது. 

பெரும்பாலான மக்கள் இங்கு வேளாண்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நகரங்களை விடவும் கிராமங்களில் அதிக மக்கள் வசிப்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் பல்வேறு ஆதிகுடி மக்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இந்த மக்கள் யாவருமே தங்கள் பாரம்பரிய மரபுகளின் வேர்களை இறுக பற்றிக்கொண்டுள்ளதால் இவர்களது வாழ்க்கை முறையில் பழமையின் அம்சங்களை கண்கூடாக பார்க்கலாம்.  

ஒரியா மொழி இம்மக்களின் மொழியாக பேசப்படுகிறது. இருப்பினும் தேசிய வளர்ச்சி மற்றும் நவீன தாக்கத்தின் விளைவாக ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளும் இங்கு பயன்பாட்டில் உள்ளன. கலாச்சாரம் மற்றும் உணவுமுறைகள் பாரம்பரியமான மரபுகளை கொண்ட பூமி என்பதால் இம்மாநில மக்கள் மதரீதியான சடங்குமுறைகளை பிடிவாதமாக பின்பற்றுபவர்களாக உள்ளனர். 

ஒடிசி எனும் பாரம்பரிய நடனக்கலை இம்மாநிலத்தின் மற்றொரு அடையாளமாக விளங்குகிறது. திருமண விழாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் இந்த நடனம் அரங்கேற்றப்படுகிறது. ஒடிசா மக்கள் சுவையான இயற்கை உணவை நேசிப்பவர்களாக உள்ளனர். அரிசி இங்கு மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவு வகையாக உள்ளது. 

வேளாண் குடிமக்களை அதிகம் கொண்டுள்ளதால் இம்மாநிலத்தின் பெரும்பாலான விழாக்கள் அறுவடைக்காலத்தை மையப்படுத்தியதாகவே உள்ளன. திராவிட, ஆரிய மற்றும் புராதன கலாச்சாரங்களின் கலவையை அடித்தளமாக கொண்டுள்ளதால் இங்கு பண்டிகைகள் தனித்தன்மையான இயல்புடன் கொண்டாடப்படுகின்றன. மகர் மேளா, மக சப்தமி, ரத் யாத்ரா மற்றும் துர்க்கா பூஜா போன்றவை இந்த மாநிலத்தில் விமரிசையாக கொண்டாடப்படும் முதன்மையான திருவிழாக்களாகும் இவை தவிர கலை மற்றும் கலாச்சார திருவிழாக்களாக கொனார்க் திருவிழா, ராஜா ராணி இசைத்திருவிழா, முக்தேஷ்வர் நடன திருவிழா போன்றவையும் கொண்டாடப்படுகின்றன. 

மொத்தத்தில் ஒடிசா: பெரியார், திராவிட இயக்க காலத்திற்கு முந்தைய தமிழகம் போல, ஒரு கலவைப் பாரம்பரியத்தையும், சாதிய ஏற்றதாழ்வுகளையும் கட்டிக் காக்கும் மண்ணாக தொடர்ந்து இருந்து வருகிறது. 

அந்த மண்ணுக்கு பெரியார் தொடங்கி சீமான் வரையான தலைவர்கள் தேவை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,036.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.