Show all

வழக்கு! மசூதியில் பெண்கள் நுழைய அனுமதி கேட்டுள்ள முகமதிய இணையர்

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இணையர், மசூதிக்குள் முஸ்லிம் பெண்கள் நுழைய அனுமதி கேட்டு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நடுவண் அரசு, வக்பு வாரியத்திற்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பதிலளித்திட.
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த யாஷ்மீஜ் மற்றும் ஜூபைர் அகமது பீர்ஜாதே என்ற இணையர், மசூதிகளில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் முஸ்லிம் பெண்கள் நுழைய அனுமதி வழங்க வேண்டும் என உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 சபரிமலை தீர்ப்பினால் ஈர்க்கப்பட்டு மசூதியில் உள்ள பாலின வேறுபாட்டை எதிர்த்து மனு போட்டதாகவும், மசூதியில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது சட்ட விரோதம், அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அரசியல் சட்டப்பிரிவு 14, 15, 21, 25,29 பிரிவுகளுக்கு எதிரானது எனவும் மனுவில் கூறினர்.
இந்த வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர் பாப்தே தலைமையிலான அமர்வு, சபரிமலை தீர்ப்பு காரணமாக இந்த வழக்கை விசாரணை நடத்துகிறோம் எனக்கூறி, இந்த மனு குறித்து பதில் அளிக்க நடுவண் அரசு, மத்திய வக்பு வாரியம் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் வாரியத்திற்கு உத்தரவிட்டதுடன், மசூதியில் தொழுகை நடத்த சென்ற போது தடுத்தார்களா என அந்த இணையரிடம் கேள்வி எழுப்பியது. இந்த மனுவை விசாரிக்க மேலும் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
வழக்கை தொடர்ந்த ஷூபைர் அகமது பீர்ஜாதே கூறுகையில், மசூதியில் தொழுகை நடத்த விரும்பும் பெண்களுக்கு உதவ வேண்டும் என காவல்துறையினரிடம் கோரிக்கை அளித்தோம். ஆனால், ஜமாத் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வேறு வழியின்றி வழக்கு தொடர்ந்தோம் எனக்கூறினர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,124.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.