Show all

பொய்ப் புகார் கூறியதாக எபின் பாபு மீது வழக்குப் பதிவு! வாக்குப் பதிவு எந்திரத்தில் கேளாறு என்று கூறி நிரூபிக்க இயலவில்லையாம்

வாக்குப் பதிவு எந்திரத்தில் கேளாறு என்று கூறி நிரூபிக்க முடியாமல் போனால் குற்றமாம். இந்தியத் தண்டனைச் சட்டம் 177 ன்படி 'தவறான புகார் அளித்தமை' என்று 6 மாதகால சிறைத்தண்டனையுடன் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுமாம் 

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருவனந்தபுரத்தில் நேற்று வாக்குச்சாவடியில் எபின் பாபு என்பவர் தன் வாக்கைப் பதிவு செய்த போது வாக்கைச் சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டில் இவர் அளித்த சின்னத்துக்குப் பதிலாக வேறொரு சின்னத்தில் வாக்குப்பதிவாகியிருப்பதாக புகார் அளித்தார். 
இதனையடுத்து தேர்தல் அதிகாரி சோதனை வாக்குப்பதிவு செய்து பார்த்து எபின் பாபு கூறுவது போல் இல்லை, ஆகவே பொய் புகார் கூறியதாக எபின் பாபு மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இது ஏதோ அரிதாக எபின் பாபு மட்டுமே தெரிவித்த குற்றச்சாட்டு அல்ல. பல்வேறு இடங்களில் இத்தகைய புகார்கள் எழுப்பப்பட்டன, ஆனால் புகார் எழுப்புகிறவர்களை மிரட்டும் விதமாக, சோதனையில் அவ்வாறு தவறாகப் பதிவாகவில்லை என்று நிரூபணமானால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குறைந்தது 6 மாதகாலம் சிறைத்தண்டனை அளிக்கப்பட விதிமுறை வழி செய்துள்ளது.
அசாமிய எழுத்தாளர் அரேகிருஷ்ணா தேகா என்பவர் திஒயர் ஊடகத்தில் இது குறித்து புகார் தெரிவித்த போது, 'நான் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க அந்த பொத்தானை அழுத்திய போது ஒப்புகைச்சீட்டு எந்திரம் வேறொரு வேட்பாளருக்கு வாக்களித்ததாகக் காட்டியது. நான் அதனை கேள்வி எழுப்பி வாக்குச்சாவடி அதிகாரியிடம் கொண்டு சென்றேன். அவர் நாங்கள் சோதனை வாக்கு பதிவு செய்து பார்த்து நீங்கள் சொல்வது போல் நிகழவில்லை என்றால், உங்கள் புகார் பொய்யானது என்று  6 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் பரவாயில்லையா என்றார். நான் அதிதமுயற்சி எடுக்க விரும்பவில்லை, நான் நேரடியாக கண்டதை எப்படி நிரூபிப்பது என்று தி ஒயர் ஊடகத்தில் அவர் கேட்டுள்ளார்.
முதற்கட்ட தேர்தலின் போது மீரட்டில் வாக்காளர் ஒருவர் தான் பகுஜன் சமாஜுக்கு அளித்த வாக்கு பாஜகவுக்கு விழுந்ததாக ஒப்புகைச்சீட்டு காட்டியதை தன் செல்பேசியில் படம் பிடித்ததைக் காட்டினார். உடனடியாக அந்த எந்திரம் மாற்றப்பட்டது. 
திருவனந்தபுரத்தில் நேற்று ஒரு வாக்காளர் காங்கிரசுக்கு வாக்களித்த போது ஒப்புகைச் சீட்டில் தாமரைச் சின்னம் காட்டியதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில்தான் வாக்காளர் எபின்பாபு திருவனந்தபுரத்தில் புகார் எழுப்ப, சோதனை வாக்குப் பதிவில் சரியாக இருந்ததாகக் கூறி, பொய் புகார் என்று, அவர் மீது வழக்குப் போடப்பட்டது.
ஆகவே வாக்கு பதிவு எந்திரம் பற்றிய புகார்களை குற்றம் என்பதிலிருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
எதற்கு இவ்வளவு சிரமம்? வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்திவிட்டு போக வேண்டியதுதானே என்கின்றனர் மக்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,133.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.