Show all

நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு! மேற்கு வங்க காவல்துறை ஆணையரைக் கைது செய்ய முயன்றமையால்

22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் தனது அதிகார பலத்தால் ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையை தொடங்கி இருக்கிறது நடுவண் பாஜக அரசு.

தமிழக அதிமுக அரசு: பதுங்குவதும், தப்பியோடுவதுமாக ஓரளவிற்கு இது வரை நடுவண் பாஜக அரசின் அதிகார அத்துமீறல்களை சமாளித்து வருகிறது. தமிழக அதிமுக: தினகரன் சசிகலாவிற்கு எதிராக நின்று தமிழக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு நடுவண் பாஜக அரசின் தயவில் களமாடியதால் அது பதுங்கலாம் ; பயந்தும் ஓடலாம். 

ஆனால் மம்தா அப்படி எந்தச் சலுகையையும் மோடியால் அனுபவிக்க வில்லையே? அவர்கள் தாமும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சிக்கு சொந்தக்காரராக இருக்கும் நிலையில் இன்னொரு ஆட்சி அதிகாரத்தின் அத்து மீறலுக்கு எதற்காக அஞ்ச வேண்டும்.   

மேற்கு வங்காளத்தின் காவல்துறை ஆணையரைக் கைது செய்ய நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை ஈடு பட்டிருக்க மேற்கு வங்க மம்தா அரசு நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை மாநிலக் காவல் துறையை வைத்து கைது செய்யம் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். காவல்துறை தன்னை கைது செய்ய தன்னுடைய வீட்டை சுற்றி வளைத்து இருக்கிறது என்று மேற்கு வங்க நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை இணை இயக்குனர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். 

கொல்கத்தாவில் மாநில அரசுக்கும், நடுவண் குற்றப் புலனாய்வுத் துறைக்கும் எதிரான பிரச்சனை தற்போது உச்சம் அடைந்து இருக்கிறது. இன்று இரவு 8 மணி அளவில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்ய முயன்றது. 

ஆனால் காவல்துறை ஆணையர் வீட்டிற்கு அருகில் வரும்போதே நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கு வங்க காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். 

மேற்கு வங்க முதல்வர் மமதாவின் உத்தரவின்படி கொல்கத்தா காவல்துறை அந்த நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை கைது செய்தது

அதே சமயம் கொல்கத்தாவின் மம்தா பானர்ஜி மோடி அரசின் அதிகார அத்துமீறல்களைக் கண்டித்து முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இதற்கு இடையில் கொல்கத்தா காவல்துறை மேற்கு வங்கத்தில் இருக்கும் அனைத்து நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளையும் கைது செய்ய முயன்று வருவதாக செய்திகள் வருகிறது. 

மேற்கு வங்க மாநில நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் மற்றும் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குனர் இருவரையும் தற்போது காவல்துறை கைது செய்ய திட்டமிட்டு இருக்கிறது. 

கொல்கத்தாவில் மேற்கு வங்க நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் மற்றும் இணை இயக்குனரின் வீடு தற்போது காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டு இருக்கிறது. 

மேற்கு வங்காளத்திற்கு பா.ஜனதா தொல்லை கொடுக்கிறது. அவர்கள் வலுக்கட்டாயமாக மேற்கு வங்காளத்தை அழிக்க விரும்புகிறார்கள். அமித்ஷாவும், பிரதமர் மோடியும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

தலைமை அமைச்சர் மோடி நேற்று மிரட்டியதை நீங்கள் பார்த்து இருக்கலாம். மோடி அரசு, எந்தஒரு கவனஅறிக்கையும்  கொடுக்காமல் கொல்கத்தா காவல்துறை தலைவரை கைது செய்ய அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளார்கள். என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவிக்கிறார்.

மேலும், மோடி அரசு இந்தியக் கூட்டாட்சி முறையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என மம்தா பானர்ஜி குற்;றம் சாட்டியுள்ளார். 

    -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,053.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.