Show all

முதல்வர் சித்தராமையா மீது சாக்லெட் காகித பொட்டலாம் வீசியதால் பெரும் பரபரப்பு

முதல்வர் சித்தராமையா மீது சாக்லெட் காகித பொட்டலாம் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

 

பெங்களூருவில் ஜே.சி.சாலையில் உள்ள ரவீந்திரகலாக்ஷேத்ராவில் உதயபானி கலைசங்கத்தின் வௌ;ளிவிழாவின் நிறைவுவிழா இன்று நடந்தது. அந்த விழாவில் சிறப்புவிருந்தினராக முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டார்.

 

முதல்வர் சித்தராமையா பேச தொடங்கியதும், அரங்கின் பால்கனியில் வீற்றிருந்த ஒருநபர் திடீரென எழுந்து, எங்கள் சமுதாயத்திற்கு என்ன செய்தீர்கள்? என்பதை கூறிவிட்டு பேசுங்கள். எங்கள் சமுதாயத்திற்கு எந்த நன்மையையும் செய்யாததால், என் கையில் இருக்கும் குண்டை வீசுகிறேன். என்று உரக்க கூறிவிட்டு, உருண்டையாக இருந்த ஏதோ ஒன்றை சித்தராமையா மீது வீசினார். இதனால் திடுக்கிட்ட முதல்வர் சித்தராமையா, என்ன செய்வது என்று புரியாமல் பேச்சில்லாமல் திகைத்து நின்றபடி இருந்தார்.

 

இச்சம்பவத்தால் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டு, பெரும் பரபரப்புக்குக் காரணமானது. மின்னல் வேகத்தில் பால்கனிக்கு சென்ற காவல்துறையினர் முதல்வர் சித்தராமையா மீது ஏதோ உருண்டையை வீசிய நபரை பிடித்து வெளியே இழுத்துசென்றனர். அந்த நபர் வீசிய பொருள் வெடிக்காததால் அதை சோதனை செய்தபோது, அது வெறும் காகித உருண்டை என்றும், அதில் சாக்லெட் நிரப்பப்பட்டிருந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

 

காகித உருண்டையை வீசிய நபரை விசாரித்த காவல்துறையினர் பெங்களூரு மாநகராட்சியில் வனத்துறையில் பணியாற்றிவருபவர் என்றும், அவரது பெயர் பிரசாத் என்றும் தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.

 

இது குறித்து வழக்கு பதிந்த அல்சூர் கேட் காவல்துறையினர் பிரசாத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.