Show all

வரும் 2022-ம் ஆண்டிற்குள் 5 கோடி பேருக்கு வீடு கட்டித்தரப்படும்: பிரதமர் மோடி

வரும் 2022-ம் ஆண்டிற்குள் 5 கோடி பேருக்கு வீடு கட்டித்தரப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில்,  பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

 

புதிய திட்டங்களுக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவே நாட்டின் இன்னொரு பரிணாம வளர்ச்சிக்கு அழைத்து செல்லும். இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினம் வரும் 2022-ம் ஆண்டில் கொண்டாடப்பட உள்ளது.

 

நம் நாட்டில் ஏழை மக்கள் 5 கோடி பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் 2 கோடி பேர் நகரங்களில் வசிப்பதாகவும், மீதி 3 கோடி பேர் கிராமங்களில் வசித்து வருகின்றனர்.

 

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ், 2022ம் ஆண்டிற்குள் வீடு இல்லா ஏழை மக்களுக்கு 5 கோடி வீடுகளை கட்டித்தர நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது.

 

இளைஞர்கள் திறமைகளை வளர்த்து கொண்டு வேலை கொடுப்பவர்களாக விளங்க வேண்டும். முத்ரா யோஜனா திட்டம் புதிய தொழில் முனைவோரை உருவாக்கி வளர வழிவகை செய்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.