Show all

மதிமுக சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு.

மதிமுக சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர்  வைகோ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:திராவிட இயக்க நூற்றாண்டு விழா மற்றும் பேரறிஞர்  அண்ணாவின் 107வது பிறந்தநாள் விழா மாநாடு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 15ம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டையொட்டி திருச்சி மாநகர் தியாகச்  செம்மல்கள் கீழப்பாமர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் தொடங்கி திருச்சி மாநகர், புறநகர், கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர்  மாவட்டங்கள் வழியாக 324 கி.மீ., தூரம் திராவிட இயக்க நூற்றாண்டுச் சுடர் ஏந்தி கல்லூரி மாணவர்கள் தொடர் ஓட்டமாக வருகிறார்கள். இந்த சுடரினை அன்று  காலை 10 மணிக்கு மாநாட்டு மேடையில் நான் பெற்றுக்கொள்கிறேன்.

இத்தொடர் ஓட்டத்தை ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் கணேசமூர்த்தி தொடங்கி வைக்கிறார். மாணவர் அணிச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை வகிக்கும்  இந்நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் வெல்லமண்டி க.சோமு, புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் டி.டி.சி.சேரன், அரசியல் ஆலோசனைக்குழு  உறுப்பினர் மருத்துவர் ரொகையா, மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளர் பா.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திராவிட இயக்க லட்சிய தாகம்  கொண்ட மாணவக் கண்மணிகள் திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டத்தினை வரவேற்று சிறப்பிக்குமாறும் மாநாட்டிற்கு வருகை தந்து பெருமை  சேர்க்குமாறும் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.