Show all

ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 76வது இடம்

ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 76வது இடம் கிடைத்துள்ளது. பொதுத் துறையில் ஊழல் குறித்த ஆய்வு நடத்தி வரும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு, சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு, உலக  வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து உலக நாடுகளில் நடைபெறும் பொதுத் துறை  ஊழல் முறைகேடுகளை அடிப்படையாக கொண்டு ஊழல் பார்வை குறியீட்டை தயாரித்து வருகின்றன. இதன் முடிவு குறித்து, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆசிய-பசிபிக் இயக்குனர் ராக் பிலிபட் கூறியதாவது:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஊழல் நிறைந்துள்ளது. இதை அங்குள்ள ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.  2015ம் ஆண்டுக்கான ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 76வது இடம் பிடித்துள்ளது. தாய்லாந்து, பர்கினோ பாசோ, துனிஷியா, பிரேசில், ஜாம்பியா ஆகிய நாடுகளும் இதே இடத்தை பிடித்துள்ளன. இந்தியாவை விட பூடானில் ஊழல் குறைவாக உள்ளது.  இந்தப் பட்டியலில் சீனா 83வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் ஊழல், முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைந்துள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும்  டென்மார்க் முதல் இடத்தில்  உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.