Show all

பீகார் முதல்வர் நிதிஷ் படேல் இன தலைவர்

குஜராத்தில் உள்ள படேல் இனத்தவருக்கு ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீடு வழங்க கோரி பட்டீதார் அனாமத் அந்தோலன் சமிதி ஒருங்கிணைப்பாளர் ஹர்தீக் படேல் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் அண்மையில் பீகார் முதல்வர் நிதிஷ் படேல் இன தலைவர் என்றும், பீகாரில் உள்ள படேல் இனத்தவர் தங்களை குர்மிஸ் என்று அழைத்துக் கொள்கின்றனர் என்றும் ஹர்தீக் படேல் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இந்நிலையில் ஹர்தீக் படேல் தனது அரசியல் லாபத்திற்காக நிதிஷ் குமார் பெயரை தவறாக பயன்படுத்துகிறார் என குஜராத் ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய ஜனதாதள மாநில துணை தலைவர் கோவிந்த் ஜாதவ் கூறுகையில், ஹர்தீக் படேல் நிதிஷ்குமார் பெயரை தவறாக பயன்படுத்துகிறார். நிதிஷ்குமார் பீகார் மாநிலத்தின் குர்மி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தலைவர். படேல் இனத்தவருக்கு ஓபிசியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய ஜனதா தளம் ஆதரிக்காது. மேலும் நிதிஷூக்கு தனிப்பட்ட முறையில் ஹர்தீக்கை தெரியாது. குஜராத்தில் உள்ள படேல் இனத்தவரும், பீகாரில் உள்ள குர்மி இனத்தவரும் ஒரே சமநிலையில் கிடையாது. படேல் இனத்தவருக்கு ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

அண்மையில் ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் குஜராத் கவர்னர் ஓ.பி. கோலியை சந்தித்து படேல் இனத்தவருக்கு ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர். ஏனெனில் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக மிகவும் வலுவுள்ளவர்களாக படேல் இனத்தவர் உள்ளனர். அவர்களுக்கு ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீடு வழங்குவதை அனைத்து வகையிலும் ஐக்கிய ஜனதா தளம் எதிர்க்கும். அதே நேரத்தில் படேல் இனத்தவரில் உள்ள ஏழைகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவதை ஐக்கிய ஜனதா தளம் தடுக்காது. என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.