Show all

சூடு பிடிக்க தொடங்கியுள்ளது பீகார் சட்டப்பேரவை தேர்தல்.

பீகார் மாநிலத்தில் வருகிற அக்டோபர் 12-ம் தேதி தொடங்கி நவம்பர் 5-ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பீகாரில் முகாமிட்டுள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, பீகார் மாநிலம் பங்கா பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது முதல் தனது முதல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, பகல்பூர் மாவட்டம் ககல்கான் சட்டமன்ற தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்தார்.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “மோடியின் வெற்று வாக்குறுதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. வெற்று வாக்குறுதிகளில் இருந்து விடுபட காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணிக்கு வாக்களியுங்கள். பீகார் தேர்தல் நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும்.” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி சொந்த நாட்டைவிட வெளிநாடுகளில், அதுவும் அதிகாரமிக்க மனிதர்களுடனேயே அதிக நேரத்தை செலவிடுவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டினார். மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தான் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அது அதிக அளவிலான வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித்ஷா ஆகியாரும் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.