Show all

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே! ஊழல் குறித்து தெறிக்க விடுகிறார் ராகுல். ராபேல் எப்போது வரும்: பிரான்ஸ் தூதர் தகவல்

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராபேல் போர் விமானங்கள் வாங்குவதில், ரிலையன்சுக்கு ஆதரவாக மோடி நேரடியாகவே ஈடுபட்டது குறித்து ராகுல் கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார். 

மாநில அரசுகள் மீதான குற்றச்சாட்டுகள் போல, நடுவண் அரசின் குற்றச்சாட்டை உடனடியாக வழக்கு, விசாரணை என்று முன்னெடுக்க, இந்தியாவிற்கு நம்மை ஆண்ட வெள்ளையர் நமக்கு வடித்துக் கொடுத்த சட்டத்தில் இடமில்லை. 

நடுவண் அரசின் மீதும் வழக்கு விசாரணை மேற்கொள்ள சட்டத்தில் இடம் வேண்டும் என்று நமது தாத்தா அன்ன ஹசாரே போராடுவதை நன்றாக புரிந்து கொண்ட நடுவண் அரசில் பொறுப்பிலிருக்கிற பாஜக மாநிலங்களுக்கு மட்டும் திணித்து நடுவண் அரசை தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ளவே முயல்கிறது.

இதையெல்லாம் நன்றாக புரிந்து கொண்டு, நடுவண் அரசில் பதவியேற்றால்தான் வெட்டியான வழக்குகளில் இருந்து விடுபட முடியும் என்பதால், செயலலிதா அவர்கள் தனது இறுதி காலத்தில் நாற்பதும் நமதே என்று இந்தியத்தலைமை அமைச்சர் பதவிக்கு குறி வைத்தார்கள். இன்றைக்கு இருக்கிற வேகத்தில் மம்தா, மாயவதி, சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் அப்போது விழிப்படைந்திருக்க வில்லை. அன்னஹசாரேவும் முழுவீச்சில் செயல்படாமல் முடங்கிப் போனார். அதனால் மனஉளைச்சலில் இந்த உலகத்தை விட்டே பிரிந்து சென்றார் செயலலிதா அவர்கள்.

மோடிக்கு செம ஒற்சாகம் அவர் விருப்பத்திற்கு 84 நாடுகளைச் சுற்றி வருகிறார். கார்பரேட்டுகளுக்கு சாதகமாகவே, எண்ணிம இந்தியா, பணமதிப்பிழப்பு, சரக்கு-சேவைவரி, வெளிநாட்டு ஒப்பந்தம் கூட தான் விரும்பியவர்களுக்கு.

இப்படியாக இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் நடுவண் பா.ஜனதா அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வரும் வேளையில் முதல் ரபேல் விமானம் இன்னும் ஏழு மாதங்களில் இந்தியா வந்து விடும் என தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரி சீக்லர் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'ரபேல் போர் விமானங்களை இந்தியா தேர்வு செய்தது, எங்களுக்கு கவுரவம். இன்னும் 7 மாதங்களில் முதல் விமானம் இந்திய விமானப்படையில் சேரும்' என குறிப்பிட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,070.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.