Show all

11 வயது சிறுமியை திருமணம் செய்த பாஜக தலைவர் மகன்

ஜார்கண்ட் மாநிலம் பாஜக தலைவர் தலா மராண்டி இவரது மகன் முன்னா மராண்டி 2 ஆண்டுகளாக ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பெண்ணை ஏமாற்றி, இந்த வாரம் வேறு ஒரு 11 வயது சிறுமியை திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னா மராண்டி மீது கோட்டா மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பெண் புகார் மனு அளித்து உள்ளார்,

அதில் அவர் தன்னை   திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2 ஆண்டாக தொடர்பு வைத்திருந்தார். அவர் எனக்கு ஒரு செல் போன் பரிசளித்ததுடன்,  என்னை பாலியல் தேவைக்காக மட்டும் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டார்.

மேலும் அந்த பெண் ஜார்கண்ட் மகளிர் ஆணையத்திலும் புதன்கிழமை புகார் அளித்து உள்ளார். அவரது மனு மீது நடவடிக்கை எடுப்பதாக ஆணையத்தலைவர் மகுவா மஞ்சி கூறியுள்ளார்.

முன்னா மராண்டிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் நடந்தது. அவர் 11 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து உள்ளதாக புகார் எழுந்து உள்ளது.

இந்த 2 புகாரின் பேரிலும் மகளிர் ஆணையம் முன்னா மராண்டிக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

பழங்குடியின தலைவரும் சாஹிப்கன்ஜ் மாவட்ட போரியோ சட்டப்பேரவை உறுப்பினருமான. தாலா மராண்டி கடந்த மாதம் பாஜகவின் ஜார்க்கண்ட் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதுவரை பிரச்சனைகள் இல்லாமல் அமைதியாக நடந்து வந்த மாநில பாஜக ஆட்சியில், இந்த பிரச்னை மூலம் எதிர்கட்சிகள் விசாரணை நடத்தக் கோரி போர்கொடி தூக்கி உள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.