Show all

வெறுமனே இருபது மதிப்பெண்கள் பெற்றுள்ளது பாஜக! கருநாடக இடைத்தேர்தலில் ஐந்துக்கு ஒன்று என்ற வகையில் வென்று

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி, சிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராமநகரம், ஜமகண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக போட்டியிட்டது. 

பெல்லாரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஎஸ் உக்ரப்பா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பாஜக வேட்பாளருமான ஜே.சாந்தாவை விட சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

குறிப்பாக பெல்லாரி தொகுதியில் பதினான்கு ஆண்டுகளுக்குப்  பிறகு பாஜக முதல் முறையாக தோல்வியடைந்துள்ளது அரசியலில் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சிமோகா தொகுதியில் மட்டும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.எஸ்.ராகவேந்திரா, மதசார்பற்ற ஜனதாதள வேட்பாளர் மது பங்காரப்பாவை, 52,148 என்ற குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இதே தொகுதியில் எடியூரப்பா 3.63 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,963.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.