Show all

ஆப்பிரிக்காவில் இந்தியா முக்கிய முதலீட்டாளராகத் திகழ்கிறது: மோடி.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி சலுகைக்கடன் இந்தியா வழங்கும்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி சலுகை கடன் வழங்க இந்தியா முன்வந்திருக்கிறது.

இந்திய-ஆப்பிரிக்க உச்சிநிலை மாநாட்டை புதுடில்லியில் தொடங்கி வைத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதனை அறிவித்தார்.

54 ஆப்பிரிக்க நாடுகள் புதுடில்லி கூட்டத்தில் கலந்து கொள்கின்றன. இது, இந்தியா, ஆப்பிரிக்க நாடுகள் இடையிலான கூட்டம் மட்டுமல்ல. மூன்றில் ஒரு பங்கு மனித இனத்தின் கனவுகளை ஒன்றிணைக்கும் கூட்டம் என்று திரு மோடி வருணித்தார்.

10 ஆண்டுகளுக்குள் ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் இரு மடங்காக பெருகி 70 பில்லியன் டாலரை கடந்துள்ளது. ஆப்பிரிக்காவில் இந்தியா முக்கிய முதலீட்டாளராகத் திகழ்கிறது என்றார் மோடி.

மறைந்த முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாம் மூளையில் உதித்த பான் ஆப்பிரிக்கா இ-நெட்வொர்க் திட்டத்தை இந்திய அரசாங்கம் விரிவுபடுத்தும் என்று அவர் உறுதியளித்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.