Show all

பொருளாதார நெருக்கடி! இந்தியத் தொலைத்தொடர்பு துறை ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிப்பு

விருப்ப ஓய்வுக்கு 92 ஆயிரம் பாரத் சஞ்சார் நிகம் வரை  மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் வரை ஊழியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக இந்தியத் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்தார்.

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பாரத் சஞ்சார் நிகம் வரை  மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் வரை ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக, (அதிக சம்பளம் பெறுபவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு குறைந்த கூலிக்கு ஆள் அமர்த்தும் வழக்கமே மறுசீரமைப்பு என்பதற்கான பொருளாம் தொழிற்சங்கவாதிகள் தெரிவிக்கிறார்கள்.) ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த செவ்வாய்க் கிழமை கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில், விருப்ப ஓய்வுக்கு 92 ஆயிரம் பாரத் சஞ்சார் நிகம் வரை  மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் வரை ஊழியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக இந்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:- இரு நிறுவனங்களையும் இந்திய அரசு இணைக்கும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்க முடியும். இந்த நிறுவனங்களுக்கு 4ஜி சேவை அளிக்கப்படும். இரண்டையும் லாபகரமாக இயக்க உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக அரசுக்கு விருப்ப ஓய்வு கொடுப்பதற்கு, சட்டத்தில் ஏதாவது இடமிருந்தால், முன்னெடுக்கலாமே- இணையத்தில் பகடியாடுகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,357.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.