Show all

தாய்ப்பாசத்திற்கு அடையாளமான ஐயப்பன்! கோயில்கொண்ட சபரிமலையை திருப்பதி போல மேம்படுத்த ஆளும் அரசுக்கு ஆசை

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருப்பதி கோவில் வளாகத்தில் உள்ள வசதிகளை போல, சபரிமலையிலும் ஏற்படுத்தப்படும் என, கேரளாவில் நேற்று பதிகை செய்யப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.

தாய்பாசத்திற்கு அடையாளமான தெய்வமாக ஐயப்பனுக்கு சபரிமலையில் கோவில் கட்டப் பட்டது. பிற்காலத்தில் ஆணாதிக்கவாதிகள் தாய்மைக்கு எதிரான தெய்வமாக ஐயப்பனைச் சித்தரித்து,  10 அகவை முதல் 50 அகவையுள்ள பெண்களை தெய்வக் குற்றத்திற்கு உட்படுத்தி ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதி மறுத்து வந்தனர். 

வளர்ப்புத் தாய் ஐயப்பனுக்கு எதிராக சதி செய்து, ஐயப்பனை கொல்ல புலிப்பால் வேண்டி காட்டுக்கு அனுப்பினார்கள் என்று ஐயப்பன் குறித்த தொல்கதை தெரிவிக்கிறது.  

ஐயப்பன் முழுக்க முழுக்க தாய்ப்பாசத்தின் அடையாளமாக வளர்ப்புத் தாயுக்கு புலிப்பால் கொண்டு வந்து கொடுத்தாரேயன்றி, தன்தாயின் மீது குற்றம் கண்டவர் இல்லை. 

ஆணாதிக்கவாதிகள் பெண்களை கொடுர மனம் படைத்தவர்கள் என்று சித்தரிப்பதற்காக தாய்மைக்கு சூலுற்ற பெண்களை அவமதிக்கும் முகமாக ஐயப்பன் கோயிலுக்கள் பத்து அகவை முதல் ஐம்பது அகவை வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுத்து வந்தார்கள்.

சில பாலின சமத்துவவாதிகளின் வழக்கின் பேரில், அனைத்து பெண்களையும் ஐயப்பன் கோயிலுக்குள்  அனுமதிக்க வேண்டும் என, உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆணாதிக்க வாத பாஜக ஹிந்துவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கடந்தாண்டு பெய்த கன மழை மற்றும் இந்த போராட்டங்களில், இந்த ஆண்டு, மகரவிளக்கு மற்றும் மண்டல பூசைகளின் போது, சபரிமலையில் கூட்டம் குறைந்தது.

இதனால், 100 கோடி ரூபாய் வருமானம் குறைந்ததாக, கோவிலை நிர்வகிக்கும், திருவாங்கூர் அறத்துறை கூறியுள்ளது. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான, மாநில வரவு-செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர், தாமஸ் ஐசக், சட்டமன்றத்தில் நேற்று பதிகை செய்தார்; அப்போது, அவர் கூறியதாவது: 

சிலர் அரசியல் ரீதியாக, ஐயப்பன் கோவில் பிரச்னையை பயன்படுத்துகின்றனர். கோயிலின் வருவாயை மாநில அரசு சில நலத்திட்டங்களுக்கு பயன் படுத்துவதாக கருத்துப் பரப்புதல் செய்கிறார்கள். ஆனால், கோவிலின் வருவாயை, மாநில அரசு பயன்படுத்துவதில்லை; இது பொய்யான தகவல். பல்வேறு பணிகள் மேற்கொள்ள, ஐயப்பன் கோயில் அறத்துறைக்கு 100 கோடி ரூபாய், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படுகிறது. அதேபோல், மலபார் மற்றும் கொச்சி கோயில்கள் அறத்துறைகளுக்கும், 36 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ளது போன்ற அனைத்து வசதிகளையும், சபரிமலையில் அளிப்பதற்கான நடவடிக்கையில், மாநில அரசு ஈடுபட்டுள்ளது. நிலக்கல், பம்பா உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு வசதிகளை செய்வதற்காக, கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் மூலம், 141.75 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,050.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.