Show all

அதிருமா- எதிர்பார்ப்பில் ஊடகங்கள்! இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ப.சிதம்பரம் பங்கேற்கிறார்

இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ப.சிதம்பரம் பங்கேற்க உள்ளார். பொருளாதார நிலையில் பெரும் சரிவு, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என நாடாளுமன்றத்தில் பல விவகாரங்களில் அனல்பறந்து கொண்டிருக்கும் நிலையில் சிதம்பரத்தின் பேச்சுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐஎன்எக்ஸ் ஊடக முறைகேடு வழக்கில் 106 நாட்கள் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்து பிணையில் வெளியில் வந்திருக்கிறார் இந்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம். இந்த நிலையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவர் பங்கேற்கவிருப்பதாகத் தெரியவருகிறது. 

இந்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்; உச்சஅறங்கூற்றுமன்றம் நேற்று சிதம்பரத்துக்கு பிணை வழங்கியது. இதனையடுத்து நேற்று இரவு டெல்லி திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறை வளாகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிதம்பரத்துக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சிதம்பரம் சந்தித்து பேசினார். 

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ப.சிதம்பரம் பங்கேற்க உள்ளார். பொருளாதார நிலையில் பெரும் சரிவு, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என நாடாளுமன்றத்தில் பல விவகாரங்களில் அனல்பறந்து கொண்டிருக்கும் நிலையில் சிதம்பரத்தின் பேச்சுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,357.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.