Show all

வால்மார்ட் நிறுவனம் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள்.

அமெரிக்காவின் மல்டிநேஷனல் ரீடெய்ல் நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் நுழைவதற்கு வசதியாக சுங்கத்துறை கெடுபிடிகள் இல்லாமல் இருப்பதற்காகவும் சரக்குகளை இந்தியாவிற்குள் கொண்டு வர உதவுவதற்காகவும் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை உள்ள அரசு அதிகாரிகளுக்கு பல மில்லியன் டாலர்களை லஞ்சமாக கொடுத்தாக முன்னர் தகவல் வெளியாகி இருந்தது.

இதுதொடர்பாக முன்னர் வெளியான செய்திகளையடுத்து, நடுவண் அரசு அதிகாரிகளும், வால்மார்ட் அதிகாரிகளும் இந்தப் புகார்களை மறுத்துவந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையில் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் கைமாறியதாக தற்போது உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மீண்டும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பான, அரசு உத்தரவுகளில் கையொப்பமிட ஒவ்வொரு இடத்திலும் 5 முதல் சுமார் 200 டாலர்களை ஒவ்வொரு அரசு அலுவலக மேஜையிலும் வால்மார்ட் நிறுவனம் கொட்டிக்கொடுத்ததாகவும், இவற்றை எல்லாம் மொத்தமாக கணக்கிட்டால் பல மில்லியன் டாலர்களை வால்மார்ட் நிறுவனம் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக அளித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.