Show all

உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன்

உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன் இந்தோனேஷியாவில் வசிக்கும் ஆர்ய பெர்மானா.

பத்து அகவையுள்ள இவனது எடை 192 கிலோ. 

அரிசி, இறைச்சி உணவுகளை தினமும் 5 வேளை சாப்பிடுகிறான். உடல் பருமானால் நடக்க முடியவில்லை. அதனால் பள்ளிக்கும் செல்லவில்லை.

 

ஆடைகளையும் அணிய முடியவில்லை.

‘2 பெரியவர்களின் ஒரு நாள் உணவை என் மகன் சாப்பிடுகிறான். பெரிய தண்ணீர் தொட்டியில் 4 மணி நேரம் குளிப்பான். அடுத்தவர் உதவியின்றி இரண்டு அடி கூட எடுத்து வைக்க முடியாது. அடிக்கடி மூச்சு விட சிரமப்படுவான்.

 

பிறக்கும்போது 3.2 கிலோ இருந்தான். அவனுடைய பசியையும் கட்டுப்படுத்த முடியவில்லை. எடையையும் குறைக்க முடியவில்லை. விவசாயத் தொழில் செய்துவரும் எங்களால் பெரிய மருத்துவமனைக்குச் சென்று வைத்தியம் பார்க்க இயலவில்லை’

என்கிறார் பெர்மானாவின் அம்மா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.