Show all

ஆரியர்களின் மதமும் மொழியும்

05,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆரியர்களின் பூர்வீக மதம் மகமதியம். ஆரியர்களுக்கு அடிப்படை தந்த மொழி தமிழ். 

ஆனால் தற்போது ஆரியர்கள் போற்றிக் கொள்வது தமிழர் மதத்தை. மகமதியர்கள் மொழியை. 

ஆரியர்களுக்கு சொந்தமான மொழி, ஆரியர்களுக்குச் சொந்தமான மதத்தைத் தேடி அவர்கள் பயணிக்க முடியாது. அப்படிப் பயணித்தால் அவர்களுக்குக் கிடைக்கிற விடை சுழியம்.

அதனால், தங்களுக்கு அடிப்படை தந்த மொழியான தமிழின் வீழ்ச்சிக்காகவும், தங்களின் பூர்வீக மதமான முகமதியத்தின் வீழ்ச்சிக்காகவும் இயங்குவதே அவர்கள் வாழ்மானம். அந்த வாழ்மானத்தை தொடர்ந்து நியாயப் படுத்துவதற்கான அமைப்புகளே பாஜக மற்றும் ஹிந்துத்துவா.

ஆரியர்கள் பிறப்படிப்படையில் பாரசீகர்கள். இன்றைய உலகளாவிய முகமதியர்களின் முன்னோர்கள். இதில் ஒரு குழுவினர் கைபர் போலன் கணவாய் வழியாக ஒரு மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு நாவலந்தேயம் (இன்றைய இந்தியா) வராமல் இருந்திருப்பார்களேயானால் இன்றும் அவர்கள் பாரசீகர்களாகவோ, முகமதியர்களாகவோ தங்களை அடையாளப் படுத்துகிறவர்களாக இருப்பார்கள். 

அவர்கள் நாவலந்தேயம் வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுத்தேர்ந்த மொழி தமிழ். தமிழர்கள் துணையோடு ஐம்பது விழுக்காடு தமிழ்ச் சொற்களோடு தங்களுக்கென்று செய்து கொண்ட மொழி சமஸ்கிருதம். தமிழில் இல்லாத ஜ,ஸ,ஷ எல்லாம் அவர்கள் மொழிக்கான சிறப்பெழுத்துக்கள். தமிழிலிருந்தே தங்கள் மொழி என்பதை மறைக்க தமிழை இழிவு படுத்தவும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை தாழ்த்துவதையே தங்கள் வாழ்மானமாக்கிக் கொண்டார்கள். அவர்கள் வடமொழியில் உருவாக்கியது வேதங்கள், இராமயணம், மகாபாரதம் அவ்வளவுதான். ஆரியர்கள் இந்த வேதங்கள், இராமயணம், மகாபாரதம் மூன்று உற்பத்திகளை மட்டுமே வைத்துக் கொண்டே இன்று வரை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனாலும் வடமொழியை பேச்சு மொழியாகத் தக்கவைக்க வக்கில்லை. ஆரியர்கள் யாரும் வடமொழியைப் பேச்சு மொழியாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக தமிழையும், வடமொழி பெருமையால், தமிழிலிருந்து பிரிந்த இந்தியாவின் கிளைமொழிகளே அவர்களின் பேச்சு மொழிகளாக இருந்தன. அந்த சமயத்தில் அவர்கள் முன்னோர்கள் பாரசீகர்களின் வழிவந்த முகமதியர்களின் படையெடுப்புகள் வட இந்தியாவின் மீது நிகழ்ந்தது. 

அப்போது அந்த படையெடுப்பாளர்களின் ஆதிக்க மொழியான உருதுக்குத் தாவினார்கள் ஆரியர்கள். பின்னாளில் உருது மொழியை வடமொழியில் எழுதி ஹிந்தி என்றார்கள். இன்றைக்கு ஆரியர்களின் ஆதிக்க மொழியாக ஹிந்தி இருக்கிறது. தங்களால் கட்டமைக்கப் பட்ட சமஸ்கிருதம் காணாமல் போனது. சம்ஸ்கிருதத்தைப் பேசத் தெரிந்தவர்கள் உலகம் முழுவதும் நூற்றுக்கு குறைவான பேர்களே இருக்கிறார்கள். அவர்களும் மிக விரைவில் காணாமல் போவார்கள். 

தங்கள் முன்னோர்களின் மொழியான ஹிந்தியை தற்போது தங்களின் ஆதிக்க மொழியாக ஏற்றுக்கொண்டு இந்தியாவில் மற்ற மொழிகளின் மீது திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிற இவர்கள் இவர்களின் பூர்வீக மதமான முகமதியத்திற்கு எதிரிகள். 

இவர்கள் மொழியான சமஸ்கிருதத்திற்கு அடிப்படை தந்த தமிழும் இவர்களுக்கு எதிரி. தமிழர்கள் வீழ்ச்சிக்காக உலகளாவிய உள்ளடி வேலைகளை காலம் காலமாக செய்து வருகிறார்கள். 

இந்தியாவில் இருக்கிற அத்தனை கோயில்களும் தமிழர்கள் கட்டியது. இந்தியாவின் சமயம், தமிழர் சமயங்களாகிய சிவனிய, மாலிய சமயங்கள். தங்களோடு வாழ்ந்து, சாதித்து மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு நடுகல் நாட்டி வழிபட்டனர் தமிழர். அதை லிங்கத்தை வைத்து வழிபடுகிறார்கள் என்று தமிழர் நடுகல் வழிபாட்டை நையாண்டி செய்த ஆரியர்கள், பிற்காலத்தில் தமிழர் நடுகல்லையே லிங்கம் என்று கதைகட்டி தமிழர் சமயங்களைத் தங்கள் மதமாக்கிக் கொண்டார்கள் ஆரியர்கள்.  தமிழர்கள் கோவில் கட்டினால் அந்தக் கோயிலுக்கான காரணத்தைக் கட்டி அந்த கோயிலுக்குள் தாங்கள் நுழைந்து விடுவார்கள்.  

ஆரியர்கள் தமிழர் இறையியலை தங்கள் கதைகளோடு ஹிந்து மதமாகவும் ஆன்மீகமாகவும் கொண்டாடி வருகிறார்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,037.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.