Show all

அருண் ஜேட்லி பிரசார வியுகம்.

பீகார; சட்டப்பேரவை தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றால் பீகாரில் குழப்பமான, அமைதியில்லாத ஆட்சி அமையும் என்று மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாஜக சார்பில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அருண் ஜேட்லி வெளியிட்டு பேசியதாவது,  மாறுபட்ட கருத்துக்களை கொண்டது நிதிஷ்குமார் அமைத்துள்ள கூட்டணி. இந்தக் கூட்டணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு வேளை வெற்றி பெற்றால் பிகாரில் குழப்பமான ஆட்சியே நடைபெறும் என்றார்.

மேலும், நிதிஷ்குமார் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் அருண் ஜெட்லி குற்றம் சாட்டினார்.

பிகாரில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி அமைந்தால் மத்திய பிரதேசத்தை போன்றே பிகாரையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். சாலைகள், உள்கட்டமைப்புகள், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும். அதற்கு மத்திய அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என அருண் ஜேட்லி கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.