Show all

இன்று தீபாவளி! எண்கள் உலகினருக்குத் தமிழர் கொடை; தீபாவளி ஆரியர்களுக்குத் தமிழர் கொடை

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர்தம் ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ என்கிற தமிழ் எண்களைத் தாம், கொஞ்சம் அப்படி இப்படி மாற்றி உலகினர் தம் 123456789 வடிவத்திலான உலக எண்களாகக் கொண்டனர். எண்கள், வானியல், விழாக்கள் உலகினருக்கு தமிழர் அளித்த கொடை.

அந்த வகையில் இன்று தமிழர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிற தீபாவளி ஆரியர்களுக்குத் தமிழர் வழங்கிய கொடையே.  இயற்கையைப் போற்றுவது தமிழர் விழா மரபு ஆகும். தையில் பொங்கல், ஆடியில் நீர்ப் பெருக்கு விழா, கார்த்திகையில் விளக்குத் திருவிழா என்பன தமிழர்தம் இயற்கை போற்றும் விழாக்கள் ஆகும்.

நாடோடிகளாக தமிழர்களோடு வந்து கலந்த ஆரியர்கள் தங்கள் தொன்மக் கதைத் தலைவர்களோடு இணைத்து தமிழரின் ஒவ்வொரு விழாவிற்கும் கதை கட்டினர். அந்தக் கதைகளின் அடிப்படையில் நாம் பொங்கலையோ, ஆடிநீர்ப் பெருக்கு விழாவையோ கொண்டாடுவதில்லை. ஆனால் கார்த்திகை விளக்கு திருவிழாவை கார்த்திகை மாத கார்த்திகை நாள்மீன் நாளில் கொண்டாடுகிறோம். தமிழர் நாட்காட்டி ஞாயிறை மையமாகக் கொண்டது. ஆரியர் நாட்காட்டி நிலாவை மையமாகக் கொண்டது. அதனால் அவர்கள் விழாவை திதி அடிப்படையிலேயே கொண்டாடுவார்கள். அந்த வகையில் அவர்கள் கொண்டாடத் தொடங்கிய விளக்குத் திருவிழா ஐப்பசி அமாவாசை நாளில் தீபாவளி என்ற பெயரில் அமைத்துக் கொள்ளப் பட்டது.  

தமிழர்கள்- ஐரோப்பியரின் கிறுத்து பிறப்பைக் கொண்டாடுவது போல, மகமதியர்களின் ரம்சானைக் கொண்டாடுவது போல ஆரியர்களின் தீபாவளியையும் கொண்டாடத் தொடங்கி விட்டோம். தீபாவளியைத் தாராளமாக தமிழர் கொண்டாடுவோம். தீபாவளிக்காக ஆரியர் கட்டிய கதையைக் கொண்டாடுவது தமிழர்க்கு இழிவாகும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,963.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.