Show all

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு எரிவாயு மானியம் ரத்து

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தானாக முன்வந்து எரிவாயு மானியம் வேண்டாம் என இதுவரை 57.5 லட்சம் பேர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் வருவாய் பிரிவினருக்கு சந்தை விலையில் எரிவாயு சிலிண்டர் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரி விதிப்புக்கு உள்ளாகும் வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் இருந்தால் மானியம் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உயர் வருவாய் உள்ளவர்கள் வரும் ஜனவரி முதல் தாமாகவே மானியத்தை விட்டு கொடுக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.