Show all

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும், எதிர்காலத்தில் ஒரே நாடாக இணையும்

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும், எதிர்காலத்தில் ஒரே நாடாக இணையும் என்று பாஜக பொதுச் செயலாளரும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம் மாதவ் தெரிவித்தார்.

ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் பயணங்களை முடித்துக் கொண்டு திடீரென பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்று வந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கத்தாரில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பா.ஜ.க., பொதுச் செயலாளர் ராம் மாதவ் இந்தியாவுடன் எந்த நாடு சேர விரும்பினாலும் சேர்த்து கொள்வோம் என்று கூறினார்.

ஒரு காலத்தில் ஒரே நாடாக இருந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்தால் நல்லதுதான்.

இப்படி நாங்கள் சொல்வதால், மற்ற நாட்டின் மீது போர் தொடுப்போம் என்று அர்த்தமில்லை. போரின் மூலமாக அல்லாமல், மக்களின் ஒப்புதலுடன் நடந்தால். வரலாற்றுக் காரணங்களுக்காக 60 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த பகுதிகள், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மீண்டும் ஒன்று சேரும் என்ற நம்பிக்கையை ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் தற்போதும் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். இவை இணைந்திருப்பதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் இருக்கவே செய்கின்றன.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான ராம் மாதவ், தற்போது பாஜக பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

அகண்ட பாரதம் என்ற கருத்தினை ஆர்.எஸ்.எஸ் நீண்ட நாட்களாகவே பேசி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.