Show all

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் பட்டேல் பொறுப்பேற்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் நேற்றுடன் (செப்டம்பர் 4-ந்தேதி) முடிவடைந்ததை அடுத்து ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களில் ஒருவரான உர்ஜித் பட்டேல், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். 52அகவையுள்ள பட்டேல், புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பில். பட்டம் பெற்றவர். பாஸ்டன் ஆலோசனைக் குழுவில் ஆலோசகராக செயல்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திலும் பணியாற்றியுள்ளார். 2013ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டு, பணவியல் கொள்கை துறையின் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி மாதம் மேலும் மூன்றாண்டுகளுக்கு துணை ஆளுநராக மறுநியமனம் செய்யப்பட்டு இருந்தது. ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் பட்டேலை நடுவண் அரசு சமீபத்தில் நியமித்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பணியாற்றிய ரகுராம் ராஜனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராக உர்ஜித் பட்டேல் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.